12 ராசிகளின் நல்ல குணம் மற்றும் தீய குணம் என்ன தெரியுமா?
ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணம் இருக்கிறது. அந்த வகையில் 12 ராசிகள் உடைய நல்ல குணம் மற்றும் தீய குணம் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
மேஷம்:
இவர்கள் பேச்சில் எப்பொழுதும் தைரியம் இருக்கும். ஆனால், இவர்களுடைய தீய குணம் என்று எடுத்துக் கொண்டால் திடீரென்று கோபம் கொண்டு விடுவார்கள்.
ரிஷபம்:
இவர்கள் ஒருவருக்கு உதவுவதில் முதல் ஆளாக வந்து நிற்பார்கள். ஆனால் அதிகப்பிடிவாதம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
மிதுனம்:
மிகவும் அன்பான பேச்சு கொண்டு இருப்பவர்களாக இருந்தாலும். இவர்களுடைய மனம் நிலையானதாக இருப்பதில்லை.
கடகம்:
இவர்கள் மிகவும் பண்பான குணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு முன் கோபம் அதிகம் வரும்.
சிம்மம்:
இவர்கள் எல்லோருக்கும் உதவக் கூடியவர்களாக இருக்கிறார்கள். ஆனால் தலைக் கணம் பிடித்தவர்களாகவும் இருக்கிறார்கள்.
கன்னி:
இவர்கள் மிகுந்த கருணை உள்ளம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இவர்களிடம் அதிக சந்தேக குணம் இருக்கும்.
துலாம்:
இவர்கள் மிகுந்த பண்பாளராக இருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு அவசர புத்தி அதிகமாக இருக்கும்.
விருச்சிகம்:
இவர்கள் மிகுந்த நேர்மையான குணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இவர்களிடம் வெறுப்பு உணர்வு அதிகமாக இருக்கும்.
தனுசு:
இவர்கள் உண்மையின் அடையாளமாக திகழக்கூடியவர்கள். ஆனால் இவர்கள் மிகுந்த சோம்பேறியாக இருக்கிறார்கள்.
மகரம்:
இவர்கள் நல்ல உழைப்பாளியாக இருக்கிறார்கள். ஆனால் இவர்களிடமும் சந்தேக புத்தி அதிகம் இருக்கும்.
கும்பம்:
இவர்கள் மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர்கள். ஆனால் தனிமையை தேடுவதில் அதிக ஆர்வம் உடையவர்கள்.
மீனம்:
அன்பு இரக்க குணம் இருந்தாலும் எப்பொழுதும் கற்பனையில் மிதந்து கொண்டே இருப்பார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |