மகாபாரதம்: பழி வாங்குவதை விட அவர்களுக்கு கொடுக்கும் சிறந்த தண்டனை எது தெரியுமா?
இந்த உலகில் மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மன நிலையை கொண்டிருக்கிறார்கள். ஆக எல்லோரிடத்திலும் நாம் நன்மையை எதிர்பார்க்க முடியாது. சில நேரங்களில் அவர்கள் சுயநலமாக நம்பியவர்களுக்கு எந்த ஒரு தயக்கமும் யோசனை இல்லாமல் துரோகம் செய்கின்றார்கள்.
ஒரு சிலருக்கு துரோகம் செய்தவர்கள் சும்மா விடக்கூடாது என்கின்ற எண்ணம் இருக்கும். அவர்களை துரத்தி பழி தீர்த்து விட வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படியாக கிருஷ்ண பகவான் நமக்கு அந்த நேரத்தில் நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்?
அந்த மீளா துயரத்தில் இருந்து எப்படி மீண்டு வர வேண்டும் என்பதை பற்றி சில அறிவுரைகள் கூறுகிறார். அதை பற்றி பார்ப்போம்.

1. நமக்கு ஒருவர் துரோகம் செய்கிறார்கள் என்றால் அவர்களை பழி தீர்ப்பதற்காக நாம் அவர்கள் பின்னால்ஓட வேண்டாம். காலம் என்கின்ற ஒரு சக்கரம் கட்டாயமாக அவர்கள் செய்த பாவத்திற்கு உரிய பலனை கொடுக்க காத்திருக்கிறது என்பதை நாம் மனதில் தெளிவாக பதித்து கொண்டாலே போதும்.
2. அதேபோல் ஒருவரை பழிவாங்க வேண்டும் என்கின்ற எண்ணம் நம் மனதில் எழுந்து விட்டால் மனதில் அமைதி நிலைக்காது. அதை மறந்து அவர்களை மன்னித்தும் கடந்து விடும் பொழுது மனதும் அமைதி சூழும். முக்கியமாக பழி தீர்ப்பதை விடவும் நாம் அமைதியாக இருக்கின்ற பொழுது இறைவனால் அருளால் மிக பெரிய உயரத்தை அடைகின்றோம்.
3. ஒரு சிலர் தன்னை கண்ணீர் சிந்த வைத்தவரை சும்மா விடக்கூடாது என்று அவர்களுடைய கண்ணீரை ஆயுதமாக மாற்றுவார்கள். அதற்கு பதிலாக நாம் வெற்றியாக மாற்ற வேண்டும். இது அந்த நபரை பழி தீர்த்தத்தை விடவும் பெரிய அளவில் பாதிக்கும்.

4. இந்த உலகில் நடக்கக்கூடிய அநீதியை பார்த்துக் கொள்ள கிருஷ்ண பகவான் இருக்கிறார். ஆக நீதியை அவரிடம் விட்டுவிட்டு நேர்மையான பாதையில் செல்வதை நாம் பார்த்துக் கொள்வது அவசியம்.
மேலும், எந்த ஒரு காலகட்டத்திலும் பழி தீர்ப்பது என்பது வீரமல்ல. காயம் கொடுத்த இடத்தில் எழுந்து நின்று சிரிப்பது தான் வீரம் என்கிறார் கிருஷ்ண பகவான் .ஆக துரோகம் செய்தவர்களை பழி தீர்க்க வேண்டும் என்று நினைத்தால் அந்த ஒரு நாள் நாம் வென்று விடலாம். அதுவே மன்னித்து விடுவோம் என்று நினைக்கின்ற பொழுது ஒவ்வொரு நாளும் நாம் வெல்கின்றோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |