2026 குருவின் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 19 முதல் ராஜ வாழ்க்கை பெறும் ராசிகள் யார்?

By Sakthi Raj Aug 06, 2026 08:54 AM GMT
Report

  2026 ஆகஸ்ட் 19ஆம் தேதி அன்று நடக்க இருக்க கூடிய குரு நட்சத்திர பெயர்ச்சியானது 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்யும். இருந்தாலும் ஒரு சில ராசிகள் இதனால் மிகப்பெரிய அளவில் நன்மைகளை பெறப்போகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

தற்பொழுது அவர் பூச நட்சத்திரத்தில் இருக்கிறார். ஆகஸ்ட் 19ஆம் தேதி அவர் ஆயில்ய நட்சத்திரத்திற்கு இடம் மாறுகிறார்.

அக்டோபர் 31ஆம் தேதி வரை சனிக்கிழமை மதியம் 12:50 மணி வரையிலும் அவர் அந்த நட்சத்திரத்தில் இருக்கிறார். இதனால் எந்த ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் நன்மைகள் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம்.

2026 குருவின் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 19 முதல் ராஜ வாழ்க்கை பெறும் ராசிகள் யார்? | Guru Nakshtara Transit In Ayilyam On Aug 19 Palan

திருமணத்தடை நீங்க ஆடி கிருத்திகையில் தவறாமல் செய்ய வேண்டிய சக்திவாய்ந்த வழிபாடு

திருமணத்தடை நீங்க ஆடி கிருத்திகையில் தவறாமல் செய்ய வேண்டிய சக்திவாய்ந்த வழிபாடு

மேஷம்:

இவர்களுக்கு இந்த குரு பகவானுடைய நட்சத்திர மாற்றம் திடீர் சொத்துக்கள் வாங்கக்கூடிய யோகம், வீடுகள் வாங்கக்கூடிய யோகத்தை உருவாக்கக்கூடிய அமைப்பை கொடுக்கப்போகிறது.

நீண்ட நாள் நினைத்த இடத்தில் வேலை கிடைக்கவில்லை என்று வருந்துபவர்களுக்கு நினைத்த இடத்தில் வேலையை கட்டாயம் அமைத்துக் கொடுக்கப் போகிறார்.

மிதுனம்:

குரு பகவானுடைய இந்த நட்சத்திர பெயர்ச்சியானது இவர்களுக்கு பேச்சுத் திறன் அறிவு மற்றும் செல்வம் ஆகியவற்றில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை கொடுக்கப் போகிறது.

இவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு திடீர் திருப்பமாக ஒரு முக்கியமான நபரை சந்திக்கப் போகிறார். அந்த நபரின் வழியாக இவர்களுக்கு உயர்ந்த வழியை அடைவதற்கான வழி பிறக்கும்.

வீடுகளில் அதிர்ஷ்டத்தை பெற்றுக் கொடுக்கும் 10 சிலைகள்.. உங்கள் வீடுகளில் உள்ளதா?

வீடுகளில் அதிர்ஷ்டத்தை பெற்றுக் கொடுக்கும் 10 சிலைகள்.. உங்கள் வீடுகளில் உள்ளதா?

கன்னி:

இவர்களுக்கு இந்த குரு நட்சத்திர பெயர்ச்சியானது மிகப்பெரிய அளவில் பண வரவை கொடுக்கப் போகிறது. குழந்தைகள் வழியாக நற்செய்திகள் வந்து சேரும்.

வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் பெறப்போகிறார்கள். மூத்த சகோதர சகோதரிகளிடம் இருந்து முழுமையான ஆதரவை இவர்கள் பெறப் போகிறார்கள். திருமண வாழ்க்கை இனிமையாக அமையப் போகிறது.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US