குரு சந்திரன் சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்.. அதிர்ஷ்டம் யாருக்கு?

By Sakthi Raj Mar 24, 2026 10:06 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தில் சந்திர பகவான் செல்வத்தையும் ஆரோக்கியத்தையும் குறிக்கக் கூடியவராக இருக்கிறார். அதேபோல் குரு பகவான் ஒருவருக்கு பெயர் புகழ் அறிவு ஆகியவற்றை கொடுக்க கூடியவராக இருக்கிறார்.

அந்த வகையில் இந்த இரண்டு சக்தி வாய்ந்த கிரகமும் வருகின்ற மார்ச் 28ஆம் தேதி அன்று மிதுன ராசியில் இணைகிறார்கள். மிதுன ராசியில் நிகழ இருக்கும் இந்த இணைவானது கஜகேசரி ராஜயோகத்தை உருவாக்குகிறது.

இந்த சக்தி வாய்ந்த ராஜயோகம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதீத பலன்களை தர இருப்பதாக சொல்கிறார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

குரு சந்திரன் சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்.. அதிர்ஷ்டம் யாருக்கு? | Guru Santhiran Conjuction Bring Gajakesari Yogam

கோவில் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கறி விருந்து- எங்கு தெரியுமா?

கோவில் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கறி விருந்து- எங்கு தெரியுமா?

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த கஜகேசரி ராஜயோகமானது இவர்களுக்கு இந்த காலகட்டத்தில் நல்ல வளர்ச்சி கொடுக்கபோகிறது. கணவன் மனைவி இடையே நல்ல புரிதலும், பிரிந்து சென்ற கணவன் மனைவி ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகளையும் கொடுக்க போகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு மன அமைதியை பெற போகும் காலமாகும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த கஜகேசரி ராஜயோகமானது இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் நன்மையை செய்ய போகிறது. நீண்ட நாட்களாக தொழிலில் ஒரு சில முன்னேற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று நினைத்து கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை பெற போகிறீர்கள். அரசியல் தொடர்பாக நல்ல முன்னேற்றம் இருக்கும்.

2026: மேஷ ராசியினர் ஏப்ரல் மாதம் எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்?

2026: மேஷ ராசியினர் ஏப்ரல் மாதம் எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்?

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த கஜகேசரி ராஜயோகமானது இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பொற்காலத்தை கொடுக்கப் போகிறது. வழக்கு தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த சிக்கல் விலகும். வேலை ரீதியாக நல்ல முன்னேற்றமும் பதவி உயர்வு பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களால் இருந்த மனக்கசப்புகள் விலகும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US