பயம் நீக்கும் சக்தி வாய்ந்த அனுமன் மந்திரம்
ராமா நாமம் எங்கெல்லாம் ஒலிக்கின்றதோ அங்கு கண்டிப்பாக அனுமன் இருப்பார். ராமன் சீதையின் மீது மிகுந்த அன்பும் பக்தியும் கொண்ட ஆஞ்சிநேயர் உடல் அளவிலும் மனதளவிலும் மிகுந்த தைரியம் கொண்டவர்.
ஒருவர் வாழ்க்கையில் மிகுந்த துன்பத்தினால் உடைந்து போகும் வேளையில் அனுமனை மனதில் நினைத்தாலே தைரியம் பிறக்கும்.
தன் பக்தர்களுக்கு ஏற்படும் துயரத்தை கண்டிப்பாக அவர்கள் உடன் இருந்து இன்னல்களை நீக்கி அருள்வார் அனுமன்.
இவரை கவிச்சக்கரவர்த்தியான கம்பர் அஞ்சனையின் மைந்தனாக தோன்றியவனும், ஐம்புலன்களை வென்றவனும், சூரிய தேவனிடம் வேதங்களின் பொருள் உணர்ந்தவனும், ராமர்பிரானின் மலர் அடிகளின் மறவாத மனம் கொண்டுவணும். நித்திய சிரஞ்சீவியாக திகழ்பவர் என்று அனுமனை போற்றுகிறார்.
அனுமன் அத்தனை தூய்மையானவர் அறிவு, ஆற்றல், இசை ஞானம், உடல் வலிமை, துணிவு, புகழ், அடக்கம், ஆரோக்கியம், சொல்லாற்றல்' என்று அனைத்துக்குமே எடுத்துக்காட்டாக விளங்குபவர் அனுமன் என்று கம்பர் கூறுகிறார்.
மேலும் கீழ்கண்ட அனுமன் மந்திரம் சொல்லி வழிபட வாழ்க்கையில் துணிச்சலும் அறிவும் பிறக்கும்.
அஞ்சனை மைந்தா போற்றி !அஞ்சினை வென்றாய் போற்றி!
வெஞ்சினைக்கதிர்பின் சென்று பிழுமறையுணர்ந்தாய் போற்றி!
மஞ்சன மேனிராமன் மலர்ப்பதம் மறவாய் போற்றி!
எஞ்சலில் ஊழியெல்லாம் இன்றென விருப்பாய் போற்றி!'