இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (30.03.2024)

By Sakthi Raj Mar 30, 2024 05:14 AM GMT
Report

மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாளுக்கான பலன்கள் எப்படி அமைந்திருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம் ராசி நேயர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் தேவை இல்லாமல் கோபம் கொள்வதை தவிர்க்க வேண்டும் .மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுது சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும் .மேலும் தொழில் செய்யும் இடத்தில சக ஊழியர்களை தட்டி கொடுத்து கொண்டு போவது நன்மை தரும்.மொத்தமாக இன்று விழிப்புடன் செயல்படுவது நன்மை உண்டாக்கும்

ரிஷபம்

குழந்தைகளை புதிய வழியில் வழி நடத்திசெல்வீர்கள்.எதிர்ப்பாராத சந்திப்பு நிகழும்.விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதற்க்கு வாய்ப்புகள் உண்டு .வாகனத்தை சீர் செய்வீர்கள்.வேற்று மதத்தர் உதவுவார்கள்.வேலையில் புது பொறுப்புகள் தேடி வரும்.நன்மைகள் நிறைந்த நாள்.

மிதுனம்

குடும்பத்தாரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள்.பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். வழக்கு சம்பதமான விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள்.புதிய நண்பர்களின் அறிமுகம் உண்டாகும்.வியாபாரத்தில் வரவு உயரும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்

கடகம்

புதிய திட்டங்கள் நிறைவேறும் நாள் . பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்த காரியம் முடிவடையும் . வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும்.புதுமை படைக்கும் நாள்

சிம்மம்

பழைய நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். கலைப் பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டுவீர்கள் . பயணங்களால் புத்துணர்ச்சி கிடைக்கும் . தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

கன்னி

துணிச்சலான சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். வெற்றிக்கு குவியும் நாள்

 துலாம்

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தோற்றப்பொலிவு கூடும். பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும்உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

விருச்சகம்

ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். தன்னம்பிக்கை குறையும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். நட்பால் ஆதாயம் உண்டாகும் . உத்தியோகத்தில் அதிகாரி தவறுகளை சுட்டிக்காட்டினால் மாற்றிக் கொள்வது நல்லது. பதறாமல் எந்த காரியத்தையும் பக்குவமாக கையாள வேண்டிய நாள்

தனுசு

குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். சகோதர வகையில் ஆரோக்யமான விவாதங்கள் வரும். ஆடம்பர செலவுகளால் பணம் விரையமாகும் . வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடலம் ஆதலால் நிதானம் தேவைப்படும் நாள்.

மகரம்

குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். புதுவேலை கிடைக்கும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். இன்றைய இனிமையான நாள்.

கும்பம்

உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். சகோதரர்களால் நன்மைகள் உண்டாகும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். நம்பிக்கைக்குரியவர்களிடம் ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் மதிப்பு மற்றும் . புகழ் கௌரவம் உயரும் நாள்.

மீனம்

குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும் . நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உடல் நலம் சீராகும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள். 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US