ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றுவது என்ன தெரியுமா?
இந்த பூமியில் எல்லாமே ஒரு சுவாரசியமான நிகழ்வுகள் தான். அதோடு, எல்லோருமே நன்மை, தீமை, மகிழ்ச்சி, துன்பம் என்ற கலவையான விஷயங்களை கற்று தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு நிலையும் இருக்கிறது. அந்த வகையில் மனிதர்களை மனிதர்களாக மாற்றுவதும், மனிதர்களை திசை தடுமாறி போகச் செய்வது ஒரே ஒரு விஷயம் மட்டும் தான். அதுதான் "நேரம்".
அதாவது ஒருவருக்கு நேரம் சரியாக அமைந்து விட்டால், அவர் எந்த ஒரு மெனக்கிடல்கள் செய்யாமலும் தானாக எல்லாம் அவர்களை வந்து சேரும். பார்க்கும் மனிதர்கள், செல்லும் இடம், வாங்கும் பொருட்கள் என்று எல்லாமே இவர்களுக்கு சிறப்பாகவே அமையும். இவர்கள் கேட்காமல் உதவி இவர்களை வந்து சேரும்.

ஆனால் நேரம் சரியில்லை என்றால் இவர்கள் செய்யக்கூடிய எந்த காரியமும் இவர்களுக்கு கை கொடுக்காது. எவ்வளவு முயற்சி செய்தாலும் தோல்வி என்கின்ற ஒரு நிலை மட்டும் இருக்கும். நல்லவர்கள் கூட இவர்களுக்கு அந்த நேரத்தில் கடினமாக செயல்படக்கூடிய ஒரு அமைப்பு உண்டாகிறது.
ஆக நேரம் தான் ஒரு மனிதனுடைய வாழ்க்கையை தீர்மானிக்கிறது. இந்த நேரம் யாருக்கு எப்பொழுது சாதகமாகவும், பாதகமாகவும் அமையும் என்று தெரியாது. ஆனால் மனிதர்கள் நேரம் எவ்வாறாக இருந்தாலும் பொறுமையாகவும் நம்பிக்கையோடும் இருந்துவிட்டால் எல்லாம் இவர்களுக்கு சாதகமே.

இந்த பொறுமை என்பது மனிதரை எந்த நிலையிலும் பாதகமாக அமையாத அளவிற்கு காப்பாற்றுகிறது. அதனால் தான் யோகிகள், ஞானிகள் நம்மை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும், அப்பொழுதுதான் எதுவும் நம்மை தேடி வரும் என்று நமக்குச் சொல்லி இருக்கிறார்கள்.
அதனால் யாருக்கும் இன்றைய நிலைமை என்பது நிரந்தரமல்ல. ஆனால் அவன் செய்கின்ற தர்மமும் செயலும் மட்டுமே எப்பொழுதும் நிரந்தரமாக இருக்கிறது. அதில் கவனம் செலுத்தி நிலை தடுமாறாமல் வாழ்ந்து விட்டால் எல்லா நேரமும் நமக்கு நல்ல நேரமே.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |