இலங்கை மக்களின் சித்திரை வருடப்பிறப்பு- கொண்டாடும் முறை
ஆங்கில நாட்காட்டி முறைப்படி ஜனவரி மாதம் முதலாம் திகதி புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
ஆனால் உண்மையில் தமிழர்களின் முதல் மாதமாக இருப்பது சித்திரை மாதம். இந்த மாத்தின் பிறப்பை தான் தமிழ் மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள்.
தமிழ் மக்களின் முக்கியமான பண்டிகைகளுள் சித்திரை வருடப்பிறப்பு மிக முக்கியமான நாளாகும்.
புத்தாண்டு பிறந்தால் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி பிறக்கும் என்பது ஆன்றார் வாக்கு. தமிழ் வருடங்கள் மொத்தமாக 60 காணப்படுகின்றது. அதில் தற்போது நடந்துக்கொண்டிருப்பது சோபகிருது வருடம்.
வருகிற 13 ஆம் திகதியன்று குரோதி வருடம் பிறக்கவிருக்கின்றது. இந்த பண்டிகையை உலக முழுவதிலும் உள்ள அனைத்து தமிழர்களும் விமர்சையாக கொண்டாடுவார்கள்.
அந்தவகையில் இலங்கையை சேர்ந்த மக்களில் தமிழர்கள் மட்டுமல்லாமல் பௌத்தர்களும் இந்த வருடப்பிறப்பை விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். அது பற்றி விரிவாக தெரிந்துக்கொள்வோம்.
இலங்கை மக்களின் புதுவருட பிறப்பு
இந்த சித்திரை வருடப்பிறப்பை இலங்கையில் வாழும் சிங்கள மக்கள் ‘அழுத் அவுறுது’ என அழைக்கின்றனர். அதாவது அழுத் என்றால் புதிய அவுறுது என்றால் வருடம் ஆகும்.
இந்த பண்டிகையை மதம் வேறுபாடின்றி சிங்களவர்களும் தமிழர்களும் இணைந்து கொண்டாடுவார்கள்.
அதாவது கூடி விளையாடுவர்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்துவார்கள். இந்நாளினை சிங்கள கிறிஸ்தவர்களும் தமிழ் கிறிஸ்தவர்களும் கொண்டாடும் வழக்கமும் இலங்கையில் இருந்து வருகிறது.
இந்நாளில் மருத்து நீர் வைத்து குளித்தல், சமய நிகழ்வுகளுக்கான நேரம் பார்த்தல், கை விஷேடம் வழங்குதல், பலகாரங்கள் பரிமாறிக்கொள்ளுதல் மற்றும் சமைப்பதற்கான நேரம், வேலை ஆரம்பிப்பதற்கான நேரம் என அனைத்திற்கு ஓர் நேரம் வைத்து செய்வது வழக்கம்.
தமிழ், சிங்கள வருடப்பிறப்பு நிகழும் நாளிற்கு முந்தைய நாளில் எண்ணெய் பாத்திரம் வைக்கும் நிகழ்வு நிகழும். அதாவது பலகாரம் செய்வதற்கான பாத்திரத்தை அடுப்பில் வைக்கும் நிகழ்வு நடைபெறும்.
அடுத்தாக சித்திரை பிறந்தவுடன் மேற்கு திசை நோக்கி நின்று, வீட்டில் இருக்கும் பெரியவர்களால் மருத்து நீர் வைக்கப்பட்டு நீராடுவார்கள்.
அந்நாளில் பாற்சோறும் பலகாரங்களும் சமைத்து இறைவனுக்கு படைத்து வழிப்படுவார்கள். இறைவனை வழிப்படுவதற்கென புண்ணிய காலமும் இருக்கிறது. அதன் படி வழிப்பாட்டையும் மேற்கொள்வார்கள்.
வியாபாரிகள் இந்நேரத்தில் கடைகளை திறந்து அதன் பின் மீண்டும் கடைகளை மூடுவர். அதன் பின்னர் நல்ல நேரம் பார்த்து உறவினர்கள் வீட்டிற்கு சென்று பலகாரங்களை வழங்கி ஆசிர்வாதம் பெற்று கைவிசேடங்கள் வழங்கும் சம்பிரதாயம் நிகழும்.
அதே சமயம் பௌத்த பெண்கள் ‘றபான்’ தட்டி கொண்டாடுவார்கள்.
புத்தாண்டு விளையாட்டுக்கள்
இந்த பண்டிகையின் போது வழக்கமாக பாடசாலைகளிலும் கிராமப் புறங்களில் ஒரு சில விளையாட்டு போட்டிகள் வைக்கப்பட்டு கலைநிகழ்சிகள் நிகழ்த்தப்படும்.
தலையணையால் அடித்தல், கயிறு இழுத்தல், வழுக்கு மரம் ஏறுதல் மற்றும் அழகு குமாரி, குமாரன் போன்றவையாகும்.
மேலும் கோயில்களில் இடம்பெறும் சிறப்பு பூஜைகளில் கலந்துக்கொள்வார்கள். இது தவிர வெற்றிலையில் பாக்கு, மஞ்சள் அரிசி போன்றவற்றை வைத்து பணத்துடன் கைவிஷேடம் வாங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் ஒரு வாரத்திற்கு நிகழ்ந்துக்கொண்டே இருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |