இந்த முறையில் கந்த சஷ்டி விரதம் இருந்தால் அதிக நன்மைகள் கிடைக்குமாம்
கலியுக வரதனாக போற்றப்படும் முருகப்பெருமான் பக்தர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து இருக்கிறார். முருகப்பெருமானை மனதார வழிபாடு செய்து விரதம் இருப்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் கேட்ட வரத்தை முருகப் பெருமான் அருளுகிறார் என்பது பல யுகங்களாக இருந்து வரக்கூடிய நம்பிக்கையாக இருக்கிறது.
அப்படியாக முருகப்பெருமானுக்கு பல விரதங்கள் இருந்தாலும் அவருடைய கந்த சஷ்டி விரதம் ஆனது பக்தர்கள் மத்தியில் மிகவும் தாக்கத்தை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. அதாவது சஷ்டியில் விரதம் இருந்தால் எப்பேர்பட்ட வரத்தையும் நாம் பெற்று விடலாம் என்பது நம்பிக்கை.
அதிலும் முக்கியமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கந்த சஷ்டி விரதத்தை மேற்கொண்டு முருகப்பெருமானை முறையாக வழிபாடு செய்தால் அவர்களுக்கு வெகு விரைவில் முருகப்பெருமானுடைய அருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதேபோல் சஷ்டி விரதம் இருந்து குழந்தை பாக்கியம் பெற்ற தம்பதியினர்களும் ஏராளம்.
அப்படியாக முருகப்பெருமானுடைய கந்த சஷ்டி விரதத்தை எவ்வாறு நாம் கடைபிடிக்க வேண்டும்? முருகப்பெருமானை எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும் என்று முருகப்பெருமானுடைய வழிபாடுகளைப் பற்றி பல்வேறு தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் ஆன்மீக பேச்சாளரும் முருக பக்தருமான ஜே.எஸ்.கே கோபி அவர்கள். அதைப் பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







