ஜோதிட ரீதியாக ஒருவருக்கு துன்ப காலம் எப்பொழுது முடிவிற்கு வரும்?
மனிதன் எப்பொழுதுமே அவன் வாழ்க்கையில் நடந்த மகிழ்ச்சியான விஷயங்களை பேசுவதற்கு தயாராகவே இல்லை. ஆனால் 24 மணி நேரத்தில் ஏதேனும் அரை மணி நேரம் அவன் வாழ்க்கையில் ஒரு துன்பம் நேர்ந்திருந்தால் அதைப்பற்றியே அடுத்த ஒரு வாரத்திற்கு அவன் பேசிக் கொண்டு இருப்பான்.
ஆக, மனிதர்களுக்கு மனமகிழ்ச்சியோடு சிரித்துக்கொண்டே வாழ்க்கையை கடந்து விட வேண்டும் என்ற ஒரு மாயை இருப்பதாலே சிறு சிறு கசப்புகள் கூட அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய துன்பமாக தெரிகிறது.
அப்படியாக ஒரு மனிதருக்கு துன்ப எப்படி வருகிறது? அது எப்பொழுது விலகும் என்று பார்ப்போம். இங்கு கடவுள் கொடுக்கக்கூடிய விஷயங்களில் நமக்கு சாதகமானது இன்பமானதாகவும், எதிரானது துன்பமாகவும் பார்க்கப்படுகிறது.

ஆக இங்கு நமக்கு நிகழக்கூடிய விஷயங்களை நாம் தான் இன்பம் துன்பம் என்று பிரித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதையே நாம் என்று கடவுள் கொடுக்கின்ற எல்லா இன்ப துன்பத்தையும் நமக்கான பாடம் என்று எடுத்துக்கொள்ள தொடங்குகின்றமோ அன்று தான் துன்பம் சிறையில் இருந்து நாம் விடுபடுவோம். அப்பொழுது தான் நம் துன்ப காலம் விலகும்.
அதோடு, ஜோதிட ரீதியாக நாம் ஒன்றை உற்றுப் பார்த்தால் கிரகங்கள் யாருக்கும் எந்த நேரத்திலும் ஒரு மனிதனுக்கு கஷ்டத்தை கொடுத்து அதை பார்த்து ரசிக்க வேண்டும் என்று இயங்க வில்லை.
ஒவ்வொரு மனிதனுக்கும் அவனை அவன் திருத்திக் கொள்வதற்கும் ஒரு மிகச்சிறந்த மனிதனாகவும் இந்த பிரபஞ்சத்தினுடைய ஒரு மிகச் சிறந்த மாணவனாக மாற வேண்டும் என்பதற்காக கொடுக்கக்கூடிய ஒரு பாடமாகவே இருக்கிறது.
ஆனால் அதைத்தான் நாம் தவறான புரிதலில் துன்பம் இன்பம் என்று பிரித்து வைத்துக்கொண்டு கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறோம்.

நிதானமாக ஒரு இடத்தில் அமர்ந்து யோசித்துப் பார்த்தோம் என்றால் துன்பம் என்ற ஒரு காலகட்டம் நம்மை சூழ்ந்து இருக்கும் பொழுது அந்த துன்பத்தைத் தவிர அந்த நேரத்தில் உங்களுக்கு எந்த ஒரு நிகழ்வு நடந்திருந்தாலும் உங்கள் வாழ்க்கை அவ்வளவு சிறப்பானதாகவும், நீங்கள் இன்று நிற்கக்கூடிய ஒரு சிறந்த மனிதராகவும் மாற்றி இருக்காது. ஆக எந்தெந்த காலகட்டங்களில் மனிதருக்கு என்னென்ன கொடுக்க வேண்டும்?
என்னென்னகொடுத்தால் அவன் வாழ்க்கையை புரிந்து கொள்வான்? அவனை திருத்திக் கொள்வான்? என்று பிரபஞ்சம் மிக நுணுக்கமாக பூமியில் இருக்கக்கூடிய ஒவ்வொரு மனிதனுக்கும் ஆசிரியராக இருந்த கற்று கொடுத்துக் கொண்டிருக்கிறது.
ஆதலால் குழந்தைகளுக்கு நாம் கற்று கொடுக்கக்கூடியதும், நமக்கும் நாமே சொல்லிக் கொள்ள வேண்டிய ஒரு விஷயமும், நாம் இந்த பிரபஞ்சமான பள்ளியில் ஒரு மாணவர்களே! நமக்கு ஒவ்வொரு நாளும் நடக்கக்கூடிய விஷயங்கள் அனைத்தும் இந்த உலகம் நிலையானது அல்ல என்று புரிந்து கொள்வதற்கான பாடமே ஆகும். இதை செய்தால் தான் உனக்கு அங்கீகாரம் என்ற ஒரு நிலை எல்லாம் மாயை.

அன்றாட வாழ்க்கைக்கு உழைத்து உண்ண வேண்டும். பிறரை ஏமாற்றாமல் நிம்மதியோடு வாழ வேண்டும் என்பது மட்டுமே பிரபஞ்சத்துடைய கோட்பாடு. உழைத்து உண்ண தான் மனிதர்கள் அவர்களுக்கு பிடித்ததையும் இயன்றதையும் செய்கிறார்களே தவிர்த்து, இதைச் செய்தால்தான், இது! என்ற ஒரு நியதி இந்த பிரபஞ்சத்திற்கு கிடையாது. அது மனிதர்களாகிய நாமே நமக்கு வகுத்துக் கொண்டதே.
ஆக நாம் நமக்கு முதலில் இன்ப துன்பம் என்ற நிலையற்ற ஒன்றுக்கு அளவுகோள் வகுப்பதை நிறுத்தினாலே பாதி கஷ்டம் விலகும். அதோடு, எப்பொழுதும் நிலையான இன்பத்தோடு வாழ இங்கு நாம் செய்ய வேண்டிய ஒரே செயல் பகவானை சரணடைந்து ஒழுக்கமாக தினமும் நமக்கான கடமையை தவறாமல் செய்வதே ஆகும்.
அதை நாம் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க நமக்கானது நாம் தேடாமல் நம்மை வந்து அடையும். துன்பம் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் ஒன்று இல்லாமலே போய்விடும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |