துளசி மாலை அணிவதன் பலன்கள்: மறந்தும் கூட இதையெல்லாம் செய்யாதீங்க
துளசி மாலை அணிவதால் கிடைக்கும் பலன்கள் மற்றும் விதிகளை தெரிந்துக்கொள்ளுங்கள்.
துளசி மணி மாலை
துளசி மணி மாலை தெய்வீக சக்தி நிறைந்தவை. ஆன்மிக ரீதியாக பலன் தரக் கூடியவை.
பொதுவாகவே துளசி என்பது அறிவியல் ரீதியாகவும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
துளசி செடியின் அடி பாகத்தில் இருந்து எடுக்கக் கூடிய மரக்கட்டையில் இருந்து தயாரிக்கப்படுவதே உண்மையான துளசி மணி மாலை.
பெரும்பாண்மையாக, இந்த மாலையை அணிந்து கொண்டால் வெற்றிகள் தேடி வரும். உடல் வெப்பத்தை சீராக வைக்கும்.நோய் எதிர்ப்பு சக்தி உடலில் தானாக அதிகரிக்கும். சுவாச மண்டலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் எனக் கூறப்படுகிறது.
பலன்கள்
மேலும் மூச்சுத்திணறல், சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் சீராகும் என நம்பப்படுகிறது. மனஅழுத்தத்தை போக்கி, மனதை அமைதியாக்கும் ஆற்றல் கொண்டது. ஆன்மிக ரீதியாக துளசி என்பது மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமியின் அம்சம். துளசி மாலை மந்திரங்களை உச்சரிக்க ஜெப மாலையாகவும் பயன்படுத்தப்படுகிறது. 108 துளசி மணிகளை உச்சரிக்கும் போது அவர்களின் தெய்வீக பக்தி அதிகரிக்கிறது.
இதில் 2 வகையான துளசி மாலைகள் உள்ளன. ஒன்று ராம துளசி மற்றொன்று ஷ்யாமா துளசி. இரண்டும் ஒரே மாதிரியான பலன்களைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. துளசி மாலையை வாங்கியவுடன் அதை அப்படியே அணிந்து கொள்ளக்கூடாது. அதை கங்கை நீர் மற்றும் பாலில் கழுவி வழிபாடு செய்து அணிந்து கொள்ளவேண்டும். இந்த மாலையை அணிந்தால் கடைப்பிடிக்க வேண்டிய சில கட்டுப்பாடுகள் உள்ளது. என்னவென்றால்,
- சூதாட்டம், மது மற்றும் புகைபிடித்தல், போதை பொருட்களை தவிர்க்க வேண்டும்.
- தகாத வார்த்தைகள், பொய்கள், மற்றும் யார் மனதையும் புண்படுத்தும்படி பேசக்கூடாது.
- இறந்தவர் வீடு, பூப்படைதல் சடங்குகளுக்கு போகக்கூடாது. அவ்வாறு சூழல் ஏற்படுமாயின், மாலையை கழற்றி வைத்து விட்டு பின் குளித்து முடித்து அணிந்து கொள்ளலாம்.
- உறவு கொள்வது பாவமாக கருதப்படுகிறது. மாதவிடாய் காலத்தில் துளசி மாலையை அணிவது அல்லது தொடுவதை தவிர்க்க வேண்டும்.
- அசைவ உணவு, பூண்டு மற்றும் வெங்காயம் சாப்பிடக்கூடாது.