2026 ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி உலகம் எங்கிலும் இருக்கக்கூடிய இந்தியர்களால் தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாட இருக்கிறது.
அந்த வகையில், தீபாவளி பண்டிகை அன்று என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பல்வேறு விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் சிம்மம் ரங்கநாதன் அவர்கள். அதைப் பற்றி பார்ப்போம்.
தீபாவளி அன்று அதிகாலை 5 மணிக்குள் எண்ணெய் தேய்த்து கங்கா ஸ்நானம் செய்வது மிகவும் விசேஷமானது. இது உடல் மற்றும் மனதை தூய்மைப்படுத்தி அந்த பண்டிகையை வரவேற்க தயாராக இருப்பதை குறிக்கிறது. தீபாவளி அன்று சூரிய உதயத்திற்கு முன்பாக குளிப்பதே சிறந்தது என்று சொல்கிறார்கள்.
அதோடு, தீபாவளி என்பது வெறும் கொண்டாட்டம் மட்டும் பார்க்க கூடாது. அது தீமைகளை போக்கி ஆன்மீக வெற்றியை அடைய ஒரு முக்கிய நாளாகவும் இருக்கிறது.
தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பது என்பது மகிழ்ச்சியின் வெளிப்பாடாக இருந்தாலும் தீபாவளி என்பது ஒரு நன்மை தீமையை வென்றதை கொண்டாட கூடிய ஒரு வழியாகவும் கருதப்படுகிறது. மேலும், தீபாவளி என்று என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்று பல்வேறு விஷயங்களை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |