6 கோடியில் தங்க விக்ரகத்தை காணிக்கை செலுத்திய பக்தர்
தமிழ்நாட்டில் சக்தி பீடங்களில் மிக முக்கியமான கோயிலாக திகழ்வது கன்னியாகுமாரி பகவதி அம்மன்.இவள் கடல் அலைகள் கொஞ்சிட அதன் அருகிலே சாந்த சொரூபிணியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றாள்.
பகவதி அம்மன் என்றாலே நமக்கு முதலில் நினைவிற்கு வருவது அவளின் மூக்குத்தி தான்.அவள் அணிந்து இருக்கும் மூக்குத்தியானது பல்வேறு சிறப்பம்சம் பொருந்தியது.அப்படியாக,வாழ்க்கையில் எவ்வளவு பெரிய இன்னல்கள் வந்தாலும் சரி,சமாளிக்க முடியாத கவலை வாட்டுகிறது என்றாலும் சரி,நாம் முதலில் சரண் அடையவேண்டியது அன்னை பகவதியை தான்.
அவளை ஒருமுறை தரிசித்தால் போதும் துயரம் வந்த வழி தெரியாமல் ஓடிவிடும்.அவ்வளவு வீரம் பொருந்திய அழகு அம்மா பகவதி அம்மன்.அவள் நம் மனதிற்குள் வர நம் வாழ்க்கையில் நடக்கும் பல மாற்றங்களை காணமுடியும்.
மேலும்,இங்கு காலையில் நடக்கும் 5 மணி பூஜை பார்த்தால் நாம் வேண்டிய காரியம் அனைத்தும் நடக்கும் என்பது நம்பிக்கை.
அப்படியாக கேரளா பக்தர் ஒருவர் அன்னையின் அதிகாலை 5 மணி பூஜையில் கலந்து கொண்டு ஒரு வேண்டுதல் வைக்க அன்னை அதை எந்த ஒரு மறுப்பும் இன்றி நிறைவேற்றி கொடுத்திருக்கின்றாள்.
அதனை தொடர்ந்து அந்த பக்தர் அம்மனுக்கு காணிக்கையாக 6 கிலோ 800 கிராம் தங்கத்திலான ரூ.6 கோடி மதிப்பில் அம்மன் தங்க விக்ரகத்தை காணிக்கையாக வழங்கி இருக்கின்றார்.
அதாவது தினமும் காலை, மதியம், மாலை என 3 வேளை அம்மனின் விக்ரகத்திற்கு பூஜை செய்து கோயிலை சுற்றி வலம் வரும் வைபவம் காலகாலமாக நடைபெற்று வருகிறது.
இதற்கு வெள்ளியிலான அம்மன் விக்ரகம் பயன்படுத்தப்பட்டு வந்தது.இந்த பக்தரின் வேண்டுதல் நிறைவேற அவர் அம்மனுக்கு தங்க விக்கிரகம் காணிக்கை கொடுத்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்திருக்கிறது.
இந்த தங்க விக்ரகத்தை அம்மன் சன்னிதியில் நாம் பார்த்து வழிபாடு செய்யலாம்.மேலும்,வாழ்க்கையில் தீராத துன்பத்தால் மனக்கவலை கொண்டு தவிப்பவர்கள் கட்டாயம் அதிகாலை 5 மணி பூஜை கலந்து கொண்டு அன்னையை வணங்கிட நாம் வேண்டிய காரியம் நடைபெற்று வாழ்வு வளம் பெரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |