12 ராசிகளும் செய்யவேண்டிய அதிர்ஷ்ட பரிகாரம்
நம்முடைய வாழ்க்கையில் துன்பம் சந்திக்கும் காலங்களில் நாம் இறைவழிபாடு செய்வதோடு கெட்ட காலம் கொடுக்கும் இடர்பாடுகளில் இருந்து விலக சில பரிகாரம் செய்தாலே போதும் வந்த துன்பத்தில் இருந்து நாம் ஓரளவு மீண்டு வந்து விடலாம்.
அப்படியாக ஜோதிடத்தில் 12 ராசிகளுக்கும் உரிய சிறப்பு அதிர்ஷ்ட பரிகாரங்கள் இருக்கிறது.அதை செய்வதால் அவர்களுக்கு உண்டாகும் பெருந்துன்பத்தில் இருந்து அவர்கள் மீண்டு நலன் பெறலாம்.
நாம் இப்பொழுது 12 ராசிகள் அவர்கள் வாழ்வில் சந்தோசம் பெருக செய்யவேண்டிய அதிர்ஷ்ட பரிகாரங்கள் பற்றி பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசியினர் அதிர்ஷ்டம் பெற வெள்ளி பொருட்கள் வாங்கி கோயில்களுக்கு தானம் வழங்கலாம்.இவ்வாறு செய்யும் பொழுது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு உரிய தடைகள் விலகி வெற்றிகள் கிடைக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசியினர் அவர்கள் வாழ்வின் அதிர்ஷ்டங்களை பெற ஒரு ஏழைக்கு பால் கறக்கும் பசுமாட்டை தானம் அளிப்பதால் தொழில் மற்றும் திருமணத்தில் சந்திக்கும் பிரச்னைகள் விலகும்.
மிதுனம்:
மிதுன ராசியினர் மருந்து மாத்திரை வாங்க இயலாத ஏழை குடும்பத்திற்கு உதவி செய்வதால் ஆரோக்கிய குறைபாடுகள் விலகி நிம்மதி கிடைக்கும்.
கடகம்:
கடக ராசியினர் வாழ்க்கையில் வரும் எதிர்ப்புகளை சமாளிக்கவும் அதிர்ஷ்டங்களை பெறவும் ஏழைப்பெண்களுக்கு ஆடைகள் தானமளிப்பது சிறந்த பலனை கொடுக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசியினர் வாழ்வில் பல முன்னேற்றங்களையும் அதிர்ஷ்டங்களையும் பெற ஏழைகளுக்கு உணவு வழங்குவது வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை கொடுக்கும்.
கன்னி
கன்னி ராசியினர் வாழ்வில் முன்னேற்றமும் அதிர்ஷ்டம் பெற புனித நீர்களில் நீராடுவதும் மீன்களுக்கு உணவு வழங்குவதும் சிறந்த மாற்றம் வழங்கும்.
துலாம்:
துலாம் ராசியினர் அதிர்ஷ்டம் மற்றும் பல நல்ல முன்னேற்றங்களை பெற வெள்ளிக்கிழமைகளில் பசுவின் கோமியத்தை வீட்டின் அனைத்து பகுதிகளிலும் தெளித்துவர நல்ல மாறுதல்கள் ஏற்படும்.
விருச்சிகம்:
விருச்சக ராசியினர் அதிர்ஷ்டம் பெற அரசமரத்திற்கு நீர் வார்ப்பது நல்லது. இவர்கள் அரசமரத்தையோ அதன் கிளைகளையோ ஒரு பொழுதும் வெட்டக்கூடாது
தனுசு:
தனுசு ராசியினர் வாழ்வில் நல்ல மாறுதல்களையும் அதிர்ஷ்டங்களையும் பெற முடிந்த அளவு தானம் தர்மங்கள் செய்வது நன்மை அளிக்கும்.
மகரம்:
மகர ராசியினர் நல்ல அதிர்ஷ்ட வாய்ப்புக்களை பெற பசும்பாலில் சீனிசர்க்கரை கலந்து அப்பால் ஆலமரத்தில் வேரில் ஊற்றி அந்த மண் எடுத்து நெற்றியில் திலகமிட வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.
கும்பம்:
கும்ப ராசியினர் அதிர்ஷ்டங்களையும் முன்னேற்றமும் பெற மஞ்சள் நிற பொருட்களை பிறருக்கு தானம் வழங்குவது சகல செல்வத்தையும் வழங்கும்.
மீனம்:
மீன ராசியினர் அதிர்ஷ்டம் பெற கோயில்களில் அன்னதானம் ஏற்பாடு செய்வது மிக பெரிய ஆபத்துகளில் இருந்து உங்களை காப்பாற்றும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |