மகாபாரதம் கதாபாத்திரங்கள் கற்றுத்தரும் வாழ்க்கை ரகசியங்கள்- பகுதி 1

By Sakthi Raj Nov 21, 2026 10:54 AM GMT
Report

உலகம் போற்றும் காவியங்களில் மகாபாரதம் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில், மகாபாரதத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான வாழ்க்கை பாடங்கள் பற்றி பார்ப்போம்.

மகாபாரதம்: நதிகள் சொல்லும் கர்மவினை ரகசியம் என்ன?

மகாபாரதம்: நதிகள் சொல்லும் கர்மவினை ரகசியம் என்ன?

1. கர்ணன் – தவறானவர்களிடம் நன்றிக்கடன் வைத்துக்கொள்ளாதே:

மகாபாரதத்தில் எல்லோர் மனதிலும் இடம் பிடித்த ஒரு முக்கியமான நபர் என்றால் அது கர்ணன் தான். கர்ணன் மிகவும் திறமையான வில்லாளிகளில் ஒருவர். பிறப்பால் குந்தியின் மகனாக இருந்தாலும் தேரோட்டியான அதிரத மற்றும் ராதிகாவால் வளர்க்கப்பட்டார். கர்ணனுக்கு தான் ஒரு மிகப்பெரிய வில்வத்தை வீரனாக வேண்டும் என்ற ஒரு கனவு இருந்தது.

ஆனால், அவருடைய பிறப்பு மற்றும் சமூகப் பின்னணி காரணமாக அவரால் வில்வித்தையை கற்றுக்கொள்ள முடியவில்லை. பல இடங்களில் அவருக்கு அவமானமே மிஞ்சியது. அந்த நிலையில்தான் துரியோதனன் கர்ணனுடைய திறமையை அங்கீகரித்து அவருக்கு அங்க தேசத்தின் அரச பதவியை வழங்குகிறார்.

இந்த சம்பவத்தினால் கர்ணன் துரியோதனனுக்கு தான் நன்றி கடன் பட்டிருப்பதாக கருதினார். துரியோதனன் பல நேரங்களில் தவறான பாதையில் செல்கின்றான் என்று அறிந்த பொழுதும் கர்ணன் அவனுடைய நட்பையும் நன்றியையும் கைவிடாமல் எப்பொழுதும் அவனுக்கு ஆதரவாகவே இருந்து வந்தான்.

மகாபாரதம் கதாபாத்திரங்கள் கற்றுத்தரும் வாழ்க்கை ரகசியங்கள்- பகுதி 1 | Important Life Lessons To Learn From Mahabharata

அதிகப்படியான யோசனையால் மனக்குழப்பமா? பகவத் கீதை சொல்லும் எளிய வழி

அதிகப்படியான யோசனையால் மனக்குழப்பமா? பகவத் கீதை சொல்லும் எளிய வழி

நாம் கற்றுக்கொள்ள வேண்டியது:

 மகாபாரதத்தில் எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் இங்கு தான் இருக்கிறது. அதாவது ஒருவர் நமக்கு உதவி செய்திருக்கிறார் என்பதற்காக அவர் செய்யக்கூடிய எல்லா தவறுகளுக்கும் துணை நிற்க வேண்டிய அவசியம் இல்லை.

நன்றி உணர்வு என்பது கட்டாயம் தேவை. அது ஒரு நல்ல பண்.பு இருந்தாலும் நம் நன்றி உணர்வு நம்முடைய மனசாட்சிக்கும் நீதிக்கும் எதிரானதாக எப்பொழுதும் மாறிவிடக் கூடாது. நன்றி உணர்வு எப்பொழுதும் ஒருவர் அநீதிக்கு துணை போகின்ற பொழுதும் அவர்களுக்காகவே நிற்கக்கூடிய அளவிற்கு இல்லாமல் இருப்பதே தர்மம் ஆகும்.

2. திரௌபதி – சரியான இடத்தில், சரியான நேரத்தில் பேசவும் செயல்படவும் வேண்டும்:

மகாபாரதத்தில் மறக்க முடியாத மற்றும் நினைவில் இருக்கக்கூடிய கதாபாத்திரங்களில் திரௌபதி ஒருவர். திரௌபதி பாஞ்சால நாட்டு இளவரசியாகவும் ஐந்து பாண்டவர்களுக்கும் மனைவியாக இருந்தவர். மகாபாரதத்தில் துணிச்சலும் சுயமரியாதையும் நீதியாகிவற்றின் அடையாளமாக விளங்கியவர். பகவான் கிருஷ்ணருடைய நெருங்கிய தோழியாகவும் திகழப்படுகிறார்.

அப்படியாக , மகாபாரதத்தில் மயன் உருவாக்கிய மாய சபை மிகவும் அழகானதும் வியக்கத்தக்க கூடிய கட்டமைப்புகளை கொண்டதுமாக இருந்தது. அங்கு தரை போல் காணக்கூடிய இடத்தில் நீரும், நீர் போல் இருக்கக்கூடிய இடத்தில் தரையும் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த மாய சபையில் ஒரு முறை துரியோதனன் குழப்பம் அடைந்து பல இடங்களில் தடுமாறியதாக சொல்லப்படுகிறது.

அதோடு துரியோதனன் தடுமாற்றத்தை பார்த்து திரௌபதி சிரித்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிகழ்வு ஏற்கனவே பொறாமையையும் கோபத்தையும் கொண்டுள்ள துரியோதனனுக்கு அதிகரிக்கக் கூடியதாக அமைகிறது.

மகாபாரதம் கதாபாத்திரங்கள் கற்றுத்தரும் வாழ்க்கை ரகசியங்கள்- பகுதி 1 | Important Life Lessons To Learn From Mahabharata

நாம் கற்றுக்கொள்ள வேண்டியது:

ஒருவருடைய பலவீனத்தை கண்டு கேலி செய்வதும் அவர்களை அவமானப்படுத்துவதும் தேவை இல்லாத பகையையும் மனக்கசைப்பையும் உருவாக்கும். ஆகையால், ஒருவருடைய சிரிப்புக்கும் வார்த்தைக்கும் தகுந்த இடமும் நேரமும் இருக்கிறது. மற்றவர்களுடைய சுயமரியாதை பாதிக்காது அளவில் நடந்து கொள்ள வேண்டும் என்பதை இவை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.   

குறிப்பு:

இந்த எழுத்து வாசகர்களுக்கு சிந்தனை மற்றும் அறிவூட்டும் நோக்கத்திற்காக எழுதப்பட்டது. மகாபாரதம் தொடர்பான கதைகள் மற்றும் விளக்கங்கள் பல்வேறு மரபுகளில் வேறுபடலாம்.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US