2026-ல் கடனை அடைக்கும் யோகம் பெறப்போகும் ராசிகள்
காலங்கள் மிக வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் காலம் எவ்வளவு வேகமாக ஓடினாலும் உரிய நேரத்தில் நமக்கு உரியதை சரியாக நம்மிடம் விட்டு சென்று விடுகிறது. அவை மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி துன்பமாக இருந்தாலும் நமக்கு எந்த நேரத்தில் எது நம்மை வந்து அடைய வேண்டுமோ அவை சரியாக நம்மை வந்து சேர்ந்து விடும்.
அப்படியாக மனித வாழ்வில் கடன் என்பது ஒரு மாயை. கடனை எப்படி வாங்குகின்றோம்? அவை எவ்வாறு அதிகரிக்கிறது என்று புரியும் முன் மிக பெரிய அளவில் கடன் சேர்ந்து விடும். இது தான் காலத்தின் செயல்.
அந்த வகையில் கடன் வாங்கி மிகவும் துன்பப்படுபவர்களுக்கு 2026 ஆம் ஆண்டு எப்படி இருக்க போகிறது? எந்த ராசிக்கு கடனை முழுமையாக அடக்கக்கூடிய பாக்கியமும் யோகமும் கிடைக்கப் போகிறது என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசியினருக்கு இந்த புத்தாண்டு வருடம் நிச்சயம் அவர்களுக்கு தொழில் ரீதியாக ஒரு நல்ல லாபத்தை பெற்று கொடுக்க போகிறது. நீண்ட நாட்களாக கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டு இருந்தீர்கள் என்றால் நிச்சயம் அதிலிருந்து விடுபடக்கூடிய ஒரு அற்புதமான வாய்ப்புகள் உருவாகும்.
வீடுகளில் சுப நிகழ்ச்சிகள் எந்த தடையும் இன்றி நிறைவேறும். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாக உங்களுக்கு இத்தனை நாட்கள் இருந்து வந்த சங்கடங்கள் எல்லாம் விலகி நன்மை உண்டாக போகிறது.
கன்னி:
கன்னி ராசியினருக்கு தங்களை ஆடம்பரமாக காட்டி கொள்வது என்பது பிடித்தமான ஒன்று. இவர்கள் தங்களை எப்பொழுதும் ஒரு பெரிய அளவில் ஒரு இடத்தில் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஒரு துடிப்போடு இருப்பார்கள். இதனாலே ஆடம்பர செலவுகள் அதிகமாகிறது.
அப்படியாக 2026 ஆம் ஆண்டு நீங்கள் முதலில் செய்யப் போகின்ற வேலை உங்களுடைய கடனை முழுமையாக அடக்க போகிறீர்கள். உங்களுடைய விடுதலை கடனை அடைப்பதிலிருந்து தொடங்கி மகிழ்ச்சியான நாட்களாக மாறப் போகிறது.
மகரம்:
மகர ராசியினருக்கு நீண்ட நாட்களாகவே தங்களுடைய வாழ்க்கையை பற்றி நிறைய கேள்விகள் எழுந்து கொண்டிருக்கிறது. அதாவது தாங்கள் யார் எதற்காக உயிர் வாழ்கின்றோம்? எதற்காக இந்த வேலையை செய்கின்றோம்? எதற்காகஇந்த குடும்பம் என்று கிட்டத்தட்ட ஒரு சாமியார் போல் வாழ்கின்ற ஒரு நிலையில் இவர்கள் இருக்கிறார்கள்.
அதற்கெல்லாம் கிரகங்கள் தான் காரணம். இந்த கிரகங்கள் எல்லாம் 2026 ஆம் ஆண்டு மாறுதல் நிலையில் வரப் போகின்ற காரணத்தினால் இவர்களுக்கு முதலில் இந்த குழப்பங்கள் எல்லாம் விலகி நீங்கள் யார் என்று ஒரு உண்மையை புரிந்து கொள்ளக்கூடிய ஒரு நிலை வரப்போகிறது. அதுமட்டுமல்லாமல் இவர்களுக்கு பொருளாதார ரீதியாக வெற்றிகரமாக 2026 ஆம் ஆண்டு அமைந்து கடன் என்பது இல்லாமல் போகப் போகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |