இன்றைய ராசி பலன்(17.01.2025)
மேஷம்:
வேலைக்காக வெளியூர் செல்லும் பொழுது கவனமாக செல்லவேண்டும்.பிறர் மனதை புரிந்து கொண்டு நடப்பது வரும் பிரச்சனையில் இருந்து காப்பாற்றி கொள்ளமுடியும்.அமைதி காக்க வேண்டிய நாள்.
ரிஷபம்:
வியாபாரத்தில் திடீர் சிக்கலை சந்திக்கக்கூடும்.வேலைக்காக வெளியூர் பயணம் செல்வதை தவிர்க்கலாம்.மதியம் வரை மனம் குழப்பமாக இருக்கும்.எதையும் யோசித்து செல்லவேண்டிய நாள்.
மிதுனம்:
உங்கள் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.நினைத்ததை சாதிப்பீர்கள்.உடன் பிறந்தவர்களால் ஏதேனும் பிரச்சனையை சந்திக்கலாம்.பேச்சில் கவனம் வேண்டும்.ஆதாயமான நாள்.
கடகம்:
பணியிடத்தில் பாராட்டிற்கு ஆளாவீர். பொருளாதார நிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும்.நீண்டநாள் முயற்சி இன்று வெற்றியாகும். உறவினருடன் ஏற்பட்ட பிரச்னை விலகும்.
சிம்மம்:
நீண்ட நாள் உடல்நிலையில் இருந்த பிரச்சனைகள் சரி ஆகும்.மனதில் இருந்த குழப்பமும் கஷ்டமும் விலகும்.யாருக்காகவும் எந்த நேரத்திலும் வாக்குறுதி கொடுக்காதீர்கள்.கவனமாக இருக்கவேண்டிய நாள்.
கன்னி:
வரவு செலவில் நிதானமுடன் செயல்படுவது அவசியம். வாகனம் செலவை ஏற்படுத்தும்.போட்டியாளரால் நெருக்கடி அதிகரிக்கும். கையிருப்பு கரையும். செயல்களில் எச்சரிக்கை அவசியம்.
துலாம்:
உறவினர்களால் சில சங்கடம் தோன்றும்.அலுவலகத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.நேற்றைய பிரச்சனை ஒன்று முடிவிற்கு வரும்.பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
விருச்சிகம்:
உங்கள் விருப்பம் நிறைவேறும். செய்து வரும் தொழிலில் எதிர்பார்த்த வருமானம் வரும்.நினைத்ததை நிறைவேற்றி லாபம் காண்பீர். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.
தனுசு:
பெரியவர்களின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.மனதில் நீண்ட நாள் இருந்த கவலை விலகும்.பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.பண விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும்.
மகரம்:
இவர்கள் குடும்பத்தில் தேவை இல்லாத வீண் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம்.எதையும் நிதானமாக கையாளுவது அவசியம்.நினைத்தது நடக்கும் நாள்.பிள்ளைகள் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.
கும்பம்:
மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நன்மையாகும்.பயணத்தில் எச்சரிக்கை அவசியம். பணிபுரியும் இடத்தில் நெருக்கடி அதிகரிக்கும்.
மீனம்:
பிறரை பற்றி புரிந்து கொள்ள நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.யாரையும் நம்பி எதையும் செய்யவேண்டாம்.மனதில் தீராத சங்கடம் தோன்றும்.இறைவழிபாடு நன்மை தரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |