நாளைய ராசி பலன்(27-11-2025)
மேஷம்:
இன்று சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். எதையும் தீர ஆராய்ந்து ஆலோசித்து செய்யக்கூடிய பக்குவம் பெறுவீர்கள். ஒரு சிலருக்கு திடீர் உதவிகள் செய்து மகிழ்வீர்கள்.
ரிஷபம்:
வண்டி வாகனத்தில் செல்லும் பொழுது மிகவும் கவனம் தேவை. உங்கள் சொந்த வாழ்க்கையை பற்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அரசியல் தொடர்புகளால் சில சங்கடம் வரலாம்.
மிதுனம்:
வெளிநாடு செல்ல வேண்டும் என்று முயற்சி செய்பவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்துடன் தொலை தூர பயணம் மேற்கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.
கடகம்:
பிள்ளைகள் ஆரோக்கியத்தில் சில சிக்கல்கள் வரலாம். தேவை இல்லாதா மருத்துவ செலவுகளால் மன உளைச்சல் உண்டாகும். கணவனிடம் வீண் வாக்கு வாதம் செய்யாதீர்கள்.
சிம்மம்:
உங்களை பற்றி நீங்கள் புரிந்து கொள்ளும் நாள். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையலாம். அக்கம் பக்கத்தில் உங்கள் மீது வைக்கும் கருத்துக்களை கண்டு கொள்ளாதீர்கள்.
கன்னி:
குடும்பத்தில் உள்ளவர்களின் தவறுகளை சுட்டி காட்டும் பொழுது எச்சரிக்கை அவசியம். வீண் கோபம் கொள்வதை தவிர்த்தால் நன்மை அடைவீர்கள். மதியம் மேல் அலைச்சல் உண்டாகும்.
துலாம்:
காலை முதல் உடல் நிலையில் சிறு சிறு சங்கடம் சந்திப்பீர்கள். வருமானத்தை உயர்த்தும் பணிகளில் ஈடுபடுவீர்கள். செல்வாக்கு உயர்ந்து மதிப்பு பெறக்கூடிய அற்புதமான நாள்.
விருச்சிகம்:
உங்கள் மனதில் உள்ள கவலைகளை நெருங்கியவரிடம் மனம் விட்டு பகிர்ந்து கொள்வீர்கள். உடல் நிலையில் முழு அக்கறை செலுத்துவீர்கள். பிடித்த பொருட்களை வாங்கி மகிழும் நாள்.
தனுசு:
திடீர் உறவினர்களின் வருகையால் உங்கள் வீடுகளில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சொந்தங்கள் மத்தியில் நீங்கள் சந்தித்த அவமானங்கள் விலகும். பண கஷ்டம் குறையும் நாள்.
மகரம்:
உங்களின் பழைய நண்பர்களை சந்திக்கும் நாள். மனதில் இருந்த குழப்பங்களுக்கு விடை பெறுவீர்கள். பெரியவர்களின் வழிகாட்டுதலால் முக்கியமான முடிவை எடுக்கும் நாள்.
கும்பம்:
சிலருக்கு வேலை பளுவால் அலைச்சல் அதிகரிக்கும். சகோதரன் வழி உறவுகளிடம் சற்று கவனமாக இருங்கள். வேலையில் உங்களை நிரூபித்து முன்னேற்றம் பெரும் நாள்.
மீனம்:
நீண்ட நாட்களாக எதிர்பார்த்த விஷயம் ஒன்று உங்களுக்கு கைகூடி வரும். பிடித்த பொருட்களை உங்களுக்கு சிலர் பரிசாக கொடுப்பார்கள். வங்கி தொடர்பான விஷயம் சாதகமாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |