நாளைய ராசி பலன்(11-09-2025)

Report

மேஷம்:

இன்று ஒரு சிலருக்கு தொலைதூர பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு. முடிந்தவரை அலுவலகத்தில் உங்களுடைய கோபத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்து செயல்படுங்கள்.

ரிஷபம்:

உங்கள் வாழ்க்கை துணையிடம் ரகசியத்தை பகிர்ந்து கொள்ளாதீர்கள். தேவையில்லாமல் பேசுவதால் இன்று உங்கள் வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். அமைதி காக்க வேண்டிய நாள்.

மிதுனம்:

இன்று உங்களுக்கு மாலை முதல் மனதில் சில பதட்டம் உண்டாகும். தேவையில்லாமல் ஒரு விஷயத்தை செய்து விட்டதாக எண்ணி வருந்துவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள்.

கடகம்:

இன்று உங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான நாளாகும். உங்களுக்கான சில கட்டுப்பாட்டுகளை நீங்கள் வைத்துக் கொள்வது அவசியம். சிக்கல்களில் மாட்டிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சிம்மம்:

முடிந்த வரை இன்று முருகப்பெருமானை வழிபாடு செய்வதால் மட்டுமே காலையில் இருந்து நீங்கள் பிரச்சனையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

கன்னி:

ஒரு சிலருக்கு இன்று திருமண வரம் தேடி வரும் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை பயணத்தை நோக்கி நீங்கள் பயணம் செய்வீர்கள். உடன்பிறந்தவர்களால் உங்களுக்கு நன்மை உண்டாகும்.

துலாம்:

இன்று உங்களின் மன அழுத்தம் விலகும் நாள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விஷயம். உங்களுக்கு கை கூடி வரும் பெற்றோர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள்.

இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் 100 வயதிற்கு மேல் வாழ்வார்களாம்.., யார் யார் தெரியுமா?

இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் 100 வயதிற்கு மேல் வாழ்வார்களாம்.., யார் யார் தெரியுமா?

விருச்சிகம்:

இன்று உங்களுடைய பேச்சுக்களில் நிதானம் அவசியம். வாழ்க்கை துணையிடம் பொருளாதாரத்தை பற்றி பேசாதீர்கள். இன்று உங்கள் தாயிடம் வீண் வாக்குவாதம் செய்ய நேரலாம்.

தனுசு:

இன்று உங்களுக்கு அலைச்சல் உண்டாகும் நாள். காலையில் இருந்து வேலைப்பளு அதிகரிக்கும். உறவினர்களின் முழு ஆதரவை நீங்கள் பெறுவீர்கள். மருத்துவ ஆலோசனை கேட்டு நடப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

மகரம்:

அலுவலகத்தில் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள். உங்கள் திறமைக்கேற்ற பாராட்டுக்கள் கிடைக்கும். மனைவி உங்களுக்கு ஆதரவாளிப்பார். பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.

கும்பம்:

இன்று வெளி நபர்களின் அறிமுகத்தால் உங்களுக்கு சில ஆதாயம் உண்டாகும். உறவினர்களிடையே சில கருத்து மோதல்கள் உண்டாகலாம். கல்லூரி வாழ்க்கை இன்று மாணவர்களுக்கு சிறப்பாக அமையும்.

மீனம்:

இன்று நீங்கள் பல வருடங்களாக காத்திருந்த விஷயம் ஒன்று கைகூடி வரும். உங்கள் வீட்டிற்கு எதிர்பாராத விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளால் சில நன்மைகள் பெறுவீர்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US