இன்றைய ராசி பலன்(02.01.2025)
மேஷம்:
உங்கள் முயற்சிகள் சாதகமாக அமையும்.தேவை இல்லாத விவாதங்களில் தலையிடுவதை தவிர்க்வும்.அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் படிப்படியாக குறையும்.வெளியூர் பயணம் ஆதாயமாக அமையும்.
ரிஷபம்:
உங்கள் மனக்குழப்பம் சரி ஆகும்.வியாபாரத்தை விரிவுசெய்து லாபம் அடைவீர்கள்.தொலைதூர பயணத்தை தவிர்பது நல்லது.சொந்த வீடு நிலம் வாங்குவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள்.
மிதுனம்:
வாழ்க்கை பிரச்சனை மீண்டும் தொடரும்.அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக சில தொந்தரவுகள் உருவாகும்.தாய்.தந்தை ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.கவனமாக இருக்க வேண்டிய நாள்.
கடகம்:
நண்பர்கள் உதவியுடன் உங்கள் வேலைகளை நடத்தி முடிப்பீர். கூட்டுத் தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும்.நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலை இன்று முடிவிற்கு வரும்.
சிம்மம்:
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.கணவன் மனைவி இடையே பிரச்சனை அதிகரிக்கும்.பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.பயணங்களில் கவனமாக இருக்கவேண்டும்.
கன்னி:
தொழிலில் இருந்த தடைகள் விலகும். முயற்சிக்கேற்ற ஆதாயம் காண்பீர். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.அரசியலில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.உயர்ந்த இடத்திற்கு செல்வீர்கள்.
துலாம்:
திட்டமிட்டபடி உங்கள் வேலை நடைபெறும்.மனதில் தெளிவு பிறக்கும்.எதிர்க்கலாம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.நட்புகளிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.எதிர்பார்த்த பணம் வரும்.
விருச்சிகம்:
நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.வியாபாரத்தில் பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அரசு வழியில் உதவி பெறுவீர்கக்ள்.
தனுசு:
இன்று வேலை பளு அதிகரிக்கும்.மனதில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.கணவன் மனைவி உறவு சிறப்பாக அமையும்.தேவை இல்லாத பிரச்னைகள் பற்றி சிந்திப்பதை தவிர்க்கவேண்டும்.
மகரம்:
தேவையற்ற சிந்தனைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டாம். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும்.புதிய வாய்ப்பு உங்களைத் தேடிவரும். அதில் கவனமுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்.
கும்பம்:
நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும்.இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.
மீனம்:
பணியிடத்தில் சில சங்கடங்கள் உருவாகலாம் எச்சரிக்கை அவசியம்.மனதில் எதிர்பார்த்தது பூர்த்தி ஆகும்.நீண்ட நாள் எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும்.இறைவழிபாட்டால் அமைதிபெறும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |