நாளைய ராசிபலன் (30-06-2026)
மேஷம்:
ஆன்மீக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். ஆராய்ச்சி பணிகளில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை அமையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
ரிஷபம்:
வேலையில் புதிய பொறுப்புகள் தேடி வரும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சமுதாய பணிகளில் அதிக ஈடுபாடு உண்டாகும். பொறுப்புகள் அதிகமாகும்.
மிதுனம்:
இன்று சூழ்நிலை அறிந்து செயல்படுவது அவசியம். உங்களுடைய திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
கடகம்:
உறவினர்களால் மகிழ்ச்சி கிடைக்கும். கடன் சார்ந்த சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். நீண்ட காலம் நிலுவையில் உள்ள பிரச்சனைகள் முடிவு பெரும். முன்னேற்றமான நாள்
சிம்மம்:
வேலையில் உங்களுடைய நிர்வாகத் திறமை வெளிப்படும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விளங்கிச் செல்வார்கள். தொலைந்த சில பொருட்களை தேடிக்கொள்வீர்கள்.
கன்னி:
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். தன வரவுகளில் இருந்து வந்த நெருக்கடிகள் விலகும். மனதில் தெளிவு பிறக்கும். பிற மொழி பேசுபவர்களின் ஒத்துழைப்பால் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
துலாம்:
வெளியூர் தொடர்பான விஷயங்களை நல்ல மாற்றம் உண்டு. கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உங்களுக்கு உதவிகள் கிடைக்கும்.
விருச்சிகம்:
மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணியில் சாதகமான முடிவுகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். மனதளவில் இருந்த குழப்பம் விலகும்.
தனுசு:
மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். நண்பர்களின் ஒத்துழைப்பால் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். புதுவிதமான பொருட்களின் சேர்க்கை உண்டாகும். வெளியூர் பயணங்கள் நீங்கள் நினைத்தது போல் நிறைவேறும்.
மகரம்:
எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் வந்து சேரும். திடீர் பயணங்கள் மூலம் மன அழுத்தம் வரலாம். கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்வது அவசியம். நினைத்த காரியங்கள் நடைபெறுவதில் தாமதம் உண்டாகலாம்.
கும்பம்:
குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். தேவை இல்லாத வாக்குவாதம் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் நல்லது. உடமைகளில் கவனம் வேண்டும்.
மீனம்:
எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் வரும். யார் எப்படி என்று புரிந்து கொள்வீர்கள். வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்வது அவசியம். நன்மையான நாள்
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |