இன்றைய ராசி பலன் (22.08.2024)

Report

மேஷம்

எதையும் பல முறை யோசித்து சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். உங்கள் செயல்களில் தடைகளும் தாமதமும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.வேலையில் முழுமையான கவனம் செலுத்துவது நல்லது.

ரிஷபம்

வியாபாரத்தில் இருந்த தடை விலகும்.எதையும் அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். உடன் பணிபுரிபவர்களால் சில குழப்பங்கள் உண்டாகலாம்.குடும்பத்தில் சில பிரச்னைகளை சந்திப்பீர்.

மிதுனம்

நீங்கள் செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும்.மேன்மையான நாள். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.

கடகம்

பணிபுரியும் இடத்தில் சில சங்கடம் தோன்றும். மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும்.வியாபாரத்தை விரிவு படுத்துவதை பற்றி சிந்திப்பீர்கள்.கடன்களை அடைத்து நிம்மதி காண்பீர்.

சிம்மம்

நீண்ட நாள் இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும்.வருமானத்தில் திருப்தி கிடைக்கும்.விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.வேலைகளில் கவனமாக இருப்பது நல்லது.

கன்னி

அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். நண்பர்களால் லாபம் அதிகரிக்கும்.திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் குழப்பம் தோன்றும்.

திருவாரூர் மாவட்டத்தில் பார்க்க வேண்டிய முக்கியமான கோயில்கள்

திருவாரூர் மாவட்டத்தில் பார்க்க வேண்டிய முக்கியமான கோயில்கள்


துலாம்

உங்கள் முயற்சியில் இன்று வெற்றியைக் காண்பீர். எதிர்பார்ப்பு நிறைவேறும்.விவேகத்துடன் செயல்பட்டு வெற்றி காணும் நாள். இறை நம்பிக்கை உங்களை மேம்படுத்தும்.

விருச்சிகம்

உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.உங்கள் விருப்பம் நிறைவேறும் நாள்.சொந்த வீடு கட்டுவதற்கான முயற்சி மேற்கொள்வீர்கள்.நீங்கள் எண்ணியதை இன்று அடைவீர்.

தனுசு

உங்கள் முயற்சி இன்று வெற்றியாகும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். மேலதிகாரியின் கோபத்திற்கு ஆளாக நேரும்.

மகரம்

வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டிகளை சமாளித்து லாபம் காணும் நாள். சூழ்நிலையை அறிந்து செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த பணம் வர தாமதமாகும்.

கும்பம்

வியாபாரம் முன்னேற்றமடையும்.உங்கள் எண்ணம் நிறைவேறும் நாள்.பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும்.

மீனம்

வேலை பளுவால் மனம் சோர்வடையும். செயல்களில் தடையும் தாமதமும் உண்டாகும்.இறையருளால் ஏற்றம் காணும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். விற்பனை அதிகரிக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

       

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US