நம்மை வியப்பில் ஆழ்த்தும் ஸ்ரீ ரங்கம் கோயில் விசேஷங்கள்

By Sakthi Raj Mar 04, 2025 11:38 AM GMT
Report

உலக உயிராக பிறந்த அனைவரும் கட்டாயம் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசிப்பது வாழ்க்கையில் அவர்கள் செய்யும் மிக பெரிய பாக்கியம் ஆகும்.ரங்கனை கண்டாலே ஆனந்தம்,அதிலும் அவனுக்குள் அடங்கி இருக்கும் விசேஷங்களை தெரிந்து கொள்ள பேரானந்தம் கிடைக்கிறது.

அப்படியாக ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது என்ற பல்வேறு சிறப்பம்சம் பெருந்திய ஸ்ரீரங்கம் கோவில்.அப்படியாக அந்த ஏழு எண்ங்கள் அடிப்படையில் ஸ்ரீ ரங்கத்தில் பல்வேறு சிறப்புக்கள் இருக்கிறது அதை பற்றி பார்ப்போம்.

நம்மை வியப்பில் ஆழ்த்தும் ஸ்ரீ ரங்கம் கோயில் விசேஷங்கள் | Intrestings Things We Should Know About Srirangam

ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் ஏழு பிரகாரங்களைக் கொண்டுள்ளது குறிப்புடையது.அதாவது

(1) பெரிய கோவில்

(2) பெரிய பெருமாள்

(3) பெரிய பிராட்டியார்

(4) பெரிய கருடன்

(5) பெரியவசரம்

(6) பெரிய திருமதில்

(7) பெரிய கோபுரம்

இப்படி அனைத்தும் பெரிய என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கனாதருக்கு 7 நாச்சிமார்கள்

(1) ஸ்ரீதேவி

(2) பூதேவி

(3) துலுக்க நாச்சியார்

(4) சேரகுலவல்லி நாச்சியார்

(5) கமலவல்லி நாச்சியார்

(6) கோதை நாச்சியார்

(7) ரெங்கநாச்சியார் ஆகியோர்.

மனிதன் எப்பொழுது மனிதனாகலாம்

மனிதன் எப்பொழுது மனிதனாகலாம்

 

ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார்.

(1) விருப்பன் திருநாள்

(2) வசந்த உத்சவம்

(3) விஜயதசமி

(4) வேடுபரி

(5) பூபதி திருநாள்

(6) பாரிவேட்டை

(7) ஆதி பிரம்மோத்சவம்.

ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார்.

(1) சித்திரை

(2) வைகாசி

(3) ஆடி

(4) புரட்டாசி

(5) தை

(6) மாசி

(7) பங்குனி.

நம்மை வியப்பில் ஆழ்த்தும் ஸ்ரீ ரங்கம் கோயில் விசேஷங்கள் | Intrestings Things We Should Know About Srirangam

ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் உற்சவத்தில் 7ம் திருநாளன்று வருடத்திற்கு 7 முறை நம்பெருமாள் நெல்லளவு கண்டருலுவார்.

(1) சித்திரை

(2) வைகாசி

(3) ஆவணி

(4) ஐப்பசி

(5) தை

(6) மாசி

(7) பங்குனி.

சனிப்பெயர்ச்சி 2025: எந்த 4 ராசியினர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்

சனிப்பெயர்ச்சி 2025: எந்த 4 ராசியினர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்

ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும்.

(1) கோடை உத்சவம்

(2) வசந்த உத்சவம்

(3) ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவாடை

(4) நவராத்ரி

(5) ஊஞ்சல் உத்சவம்

(6) அத்யயநோத்சவம்

(7) பங்குனி உத்திரம்.

பன்னிரண்டு ஆழ்வார்களும் 7 சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள்.

(1) பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார்

(2) நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார்

(3) குலசேகர ஆழ்வார்

(4) திருப்பாணாழ்வார்

(5) தொண்டரடிபொடி ஆழ்வார்

(6) திருமழிசை ஆழ்வார்

(7) பெரியாழ்வார்

ஆண்டாள் இராப்பத்து 7ம் திருநாளில் நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில் சேவை சாதிப்பார். பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான தென் திசையில் 7 கோபுரங்கள் உள்ளன.

நம்மை வியப்பில் ஆழ்த்தும் ஸ்ரீ ரங்கம் கோயில் விசேஷங்கள் | Intrestings Things We Should Know About Srirangam

(1) நாழிகேட்டான் கோபுரம்

(2) ஆர்யபடால் கோபுரம்

(3) கார்த்திகை கோபுரம்

(4) ரெங்கா ரெங்கா கோபுரம்

(5) தெற்கு கட்டை கோபுரம்-I

(6) தெற்கு கட்டை கோபுரம்-II

(7) ராஜகோபுரம்.

ஏழு உற்சவத்தில் குறிப்பிட்ட மண்டபங்களை தவிர மற்ற மண்டபங்களுக்கு பெருமாள் எழுந்தருள மாட்டார்.

(1) வசந்த உத்சவம்

(2) சங்கராந்தி

(3) பாரிவேட்டை

(4) அத்யயநோத்சவம்

(5) பவித்ரா உத்சவம்

(6) உஞ்சல் உத்சவம்

(7) கோடை உத்சவம்.

ராகு கேது தோஷம் இருப்பவர்கள் செல்லவேண்டிய கோயில்கள்

ராகு கேது தோஷம் இருப்பவர்கள் செல்லவேண்டிய கோயில்கள்

ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாகும்.

(1) பூச்சாண்டி சேவை

(2) கற்பூர படியேற்ற சேவை

(3) மோகினி அலங்காரம், ரத்னங்கி சேவை

(4) வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாஹனம்

(5) உறையூர், ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை

(6) தாயார் திருவடி சேவை

(7) ஜாலி சாலி அலங்காரம்.

திருக்கோயில் வளாகத்தில் உள்ள ஏழு மண்டபங்களில் நம்பெருமாள் ஒரு நாள் மட்டுமே எழுந்தருள்வார்.

(1) நவராத்ரி மண்டபம்

(2) கருத்துரை மண்டபம்

(3) சங்கராந்தி மண்டபம்

(4) பாரிவேட்டை மண்டபம்

(5) சேஷராயர் மண்டபம்

(6) சேர்த்தி மண்டபம்

(7) பண்டாரம் ஆஸ்தான மண்டபம்

திருக்கோவிலில் உள்ள ஏழு பிரகாரங்களிலும் பெருமாளின் ஏழு திருவடிகள் உள்ளன. ஏழு பிரகாரங்களிலும் ஏழு திருமதில்கள் அமையப்பெற்றுள்ளன. திருக்கோயில் வளாகத்தில் ஏழு ஆச்சார்யர்களுக்கு தனி சன்னதி உள்ளது.

(1) ராமானுஜர்

(2) பிள்ளை லோகாச்சாரியார்

(3) திருக்கச்சி நம்பி

(4) கூரத்தாழ்வான்

(5) வேதாந்த தேசிகர்

(6) நாதமுனி

(7) பெரியவாச்சான்

பிள்ளை சந்திர புஷ்கரிணியில் ஆறு முறையும், கொள்ளிடத்தில் ஒருமுறையும் இப்படியாக ஏழு முறை சின்ன பெருமாள் தீர்த்தவாரி கண்டருள்வார்.

(1) விருப்பன் திருநாள், சித்திரை மாதம்

(2) வசந்த உற்சவம் வைகாசி மாதம்,

(3) பவித்ரோத்சவம் ஆவணி மாதம்,

(4) ஊஞ்சல் உற்சவம் ஐப்பசி மாதம்,

(5) அத்யயன உற்சவம் மார்கழி மாதம்,

(6) பூபதி திருநாள் தை மாதம்,

(7) பிரம்மோத்சவம். பங்குனி மாதம்.

நம்பெருமாள் மூன்று முறை எழுந்தருளும் வாகனங்கள்

(1) யானை வாஹனம் – தை, மாசி, சித்திரை

(2) தங்க கருடன் வாஹனம் – தை, பங்குனி சித்திரை

(3) ஆளும் பல்லக்கு – தை, பங்குனி சித்திரை

(4) இரட்டை பிரபை – தை, மாசி, சித்திரை

(5) சேஷ வாஹனம் – தை, பங்குனி, சித்திரை

(6) ஹனுமந்த வாஹனம் – தை, மாசி, சித்திரை

(7) ஹம்ச வாஹனம் – தை, மாசி, சித்திரை மாசி மாதம் நடைபெறும் திருப்பள்ளியோடம் திருவிழாவில் நம்பெருமாள் ஏழு வாகனங்களில் மட்டும் உலா வருவார்.

கற்பக விருட்சம், ஹனுமந்த வாகனம், சேஷ வாகனம், சிம்ம வாகனம், ஒற்றை பிரபை ஆகிய இந்த ஐந்து வாகனங்கள் தங்கத்திலும் யாளி வாகனம், இரட்டை பிரபை ஆகிய இந்த இரண்டு வாகனங்கள் வெள்ளியிலும் ஆகிய ஏழு வாகனங்களை தவிர மற்ற அனைத்து வாகனங்கள் வெள்ளி மற்றும் தங்கத்திலும் உள்ளன.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US