சோறு கண்ட இடமே சொர்க்கம் என்ற பழமொழியின் உண்மையான அர்த்தம் தெரியுமா?
அன்றாட வாழ்க்கையில் நம்முடைய உரையாடலை சுவாரசியமாகவும் சிந்திக்க வைக்கும் வைகையிலும் பழமொழி இடம் பெறுகிறது.அப்படியாக பலரும் பல பழமொழிக்கு உண்மையான அர்த்தம் தெரியாமல் பல இடங்களில் பயன் படுத்துவது உண்டு.
அதில் மிகவும் நகைச்சுவையாக சமயங்களில் சிலரை கிண்டல் செய்யும் வகையாகவும் "சோறு கண்ட இடம் சொர்க்கம்" என்ற பல மொழி பேசுவதை நாம் பார்த்து இருப்போம். ஆனால் அந்த பழமொழிக்கு பின்னால் ஒளிந்து இருக்கும் உண்மைத்துவம் தெரிந்தால் நிச்சயம் அதை விளையாட்டாக கூட பேசமாட்டோம் அதை பற்றி பார்ப்போம்.
ஐப்பசி மாதங்களில் மிகவும் விஷேசமான நிகழ்வு தான் சிவபெருமானுக்கு நடத்தப்படும் அன்னாபிஷேகம்.தினமும் சிவ பெருமானுக்கு தினம்தோறும் 16 வகையான பொருட்களால் கொண்டு அபிஷேகம் நடைபெற்றாலும், வருடத்திற்கு ஒருமுறை ஐப்பசி மாத பெளர்ணமி அன்று நடக்கும் அன்னாபிஷேகம் மிக மிக விசேஷமானதாக கருதப்படுகிறது.
யார் ஒருவர் இந்த அன்னாபிஷேகம் பூஜையை பார்க்கிறார்களோ அவர்களுக்கு கோடி புண்ணியம் கிடைத்து பிறவி பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் அன்றைய தினம் சிவபெருமானுக்கு செய்யப்படும் அன்ன பிரசாதத்தை சாப்பிட்டால் வாழ்க்கையில் ஏற்பட்ட தடைகள் யாவும் விலகி சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கும்.
இந்த அன்னாபிஷேகம் நிகழ்வை மிகவும் எளிமையாக உணர்த்தும் வகையில் அமைந்த பழமொழி தான் "சோறு கண்ட இடம் சொர்க்கம்" ஆகும்.
அன்றைய தினம் ஈசனுக்கு செய்யப்படும் அன்னாபிஷேகம் பார்க்கும் பொழுது நாம் பாவங்கள் கரைந்து சொர்க்கம் செல்வோம் என்பது தான் இந்த பழமொழியின் உண்மையான அர்த்தம்.மேலும் அன்றைய தினம் சிவலிங்க தரிசனம் செய்வது கோடி சிவலிங்க தரிசனம் செய்ததற்கு சமம் என்பது ஐதீகம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |