பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் மறு பிறவி இருப்பதாக நமது முன்னோர்கள் கூறியிருப்பார்கள்.
இது சிறு வயதில் கதையாக கேட்கும் சுவாரஸ்யமாக இருந்தாலும் காலங்கள் செல்ல செல்ல “பிறவி” இருப்பது உண்மையா? என சிந்திக்க வைக்கிறது.
அந்த வகையில் எமது முன்னோர்கள் புராணங்களில் இருக்கும் விடயங்களை மலைப்போல் நம்புகிறார்கள்.
இதனாலேயே இறந்த பின்னும் ஒரு வாழ்க்கை இருப்பதாக நினைத்து அதனை பரம்பரையில் வரும் அனைவருக்கும் கூறுகிறார்கள். ஆனால் விஞ்ஞான ரீதியாக பிறவிகள் இருப்பது இதுவரையில் நிரூபிக்கப்படவில்லை ஆனால் கதைகளில் இருக்கின்றது.
ஏழு பிறவிகள் இருப்பது உண்மையா? அப்படி என்றால் மனிதர்கள் தற்போது எத்தணையாவது பிறவியில் இருக்கிறார்கள்? இது தொடர்பான சமூக கருத்து? உள்ளவைகளை இந்த பதிவை பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஏழு பிறவிகள் இருப்பது உண்மையா?
வீட்டில் ஒருவர் இறந்து விட்டால் அவர் காகமாக இருக்கிறார்? ஆன்மாவாக இருக்கிறார்? பாம்பாக இருக்கிறார்? இப்படி பல விடயங்கள் இன்னும் சொல்லப்படுகின்றது. அதே சமயம் இறந்தவர்கள் எங்கு செல்கிறார்? அவர்களுக்கான வாழ்க்கை இருக்கிறதா? இது போன்ற கேள்விகளுக்கு பிரபஞ்சத்தில் பதில் இல்லை. ஆனால் புராணங்களில் இதற்கான பதில் இருக்கிறது.
சிவன் நம்மை காக்க பல அவதாரம் எடுத்தது போல் மனிதர்களும் பிறவிகள் எடுத்து வாழ்வதாக கூறப்படுகின்றது. இதனை மாணிக்க வாசகர் கூறும் போது “ ஏழு பிறவிகள் இருப்பது உண்மை.
இதன்படி தேவர், மனிதர், விலங்கு,பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் இப்படி ஏழு பிறவிகள் இருப்பதாக கூறுகிறார்.” இவர் கூற்றின் படி பார்த்தால் மனிதர்களாக பிறந்த நாம் அனைவரும் இரண்டாவது பிறவியில் இருக்கின்றோம்.
சமூக கருத்துக்கள்
மனிதரின் வாழ்க்கையில் பிறவி என்பது இறந்த பின்னர் இல்லை. மாறாக அவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது.
உதாரணமாக அறிவு, திறன்கள், உணர்வுகள், ஆர்வங்கள் உள்ளிட்டவைகளை போன்று.
நிச்சயம் இல்லாத வாழ்க்கையில் பிறவிகள், சொர்க்கம், நரகம், நல்லது, கெட்டது என புராணங்களின் வழி வாழாமல் நமக்கு என்ன தேவைப்படுகிறதோ? அதன்படி வாழ்வதே சிறந்தது. நாம் உண்ணும் உணவின் சேர்க்கையாக உடல் இருக்கின்றது.
அதனை இயக்கும் சக்தியாக உயிர் இருக்கின்றது. ஒரு நாள் சக்தி உடலை விட்டு பிரியும்.
அந்நாளை நினைத்து பயம் கொள்ளாமல் இருக்கும் சொந்தங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்வதே சிறந்தது என சமூகத்தினர் பிறவி தொடர்பில் கேட்ட போது பதிலளித்துள்ளனர்.