2026 ஜூலை சஷ்டி: 12 ராசிகளுக்கும் முருகப்பெருமான் சொல்லும் செய்தி என்ன?

By Sakthi Raj Jul 07, 2026 03:30 AM GMT
Report

   ஜோதிடத்தில் டாரட் ரீடிங் என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. அப்படியாக, சஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமான் 12 ராசிகளுக்கும் சொல்லும் முக்கியமான செய்தி என்ன என்பதை பற்றி பார்ப்போம்.

மேஷம்:

இவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் ஒரு எல்லையை வகுத்து செயல்பட்டால் எல்லாம் நன்மையாக அமையும்.

ரிஷபம்:

இவர்களை சுற்றி எப்பொழுதும் முருகப்பெருமானின் அருள் இருப்பதால் இவர்கள் எதற்கும் பயம் கொள்ளாமல் வாழலாம்.

மிதுனம்:

தடைகள் யாவும் விலக முருகப்பெருமானோடு வள்ளி தெய்வானையும் வழிபாடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும். அதிலும் திருக்கல்யாண கோல தரிசனம் செய்யும் பொழுது திருமண பிரச்சனைகள் விலகும்.

உங்கள் ஜாதகத்தில் 4 ஆம் வீட்டு அதிபதி எங்கு இருக்கிறார்.. உங்கள் வாழ்க்கை பலன் இதோ

உங்கள் ஜாதகத்தில் 4 ஆம் வீட்டு அதிபதி எங்கு இருக்கிறார்.. உங்கள் வாழ்க்கை பலன் இதோ

கடகம்:

இந்த காலகட்டங்களில் இவர்களுடைய பெற்றோர்களை கவனித்துக் கொள்வது மிகவும் அவசியம். அவ்வாறு செய்யும் பொழுது முருகப்பெருமானின் முழு ஆசிர்வாதத்தை பெறுகிறார்கள்.

சிம்மம்:

முருகப்பெருமான் இவர்களுக்கு எப்பொழுதும் காவல் தெய்வமாக இருந்து வழி நடத்துவதால் துணிச்சலாக செயல்பட்டு சாதிக்கலாம்.

கன்னி:

இவர்கள் எங்கு சென்றாலும் முருகப்பெருமானை மனதில் நினைத்து மனம் உருகி பிரார்த்தனை செய்யும் பொழுது காரியங்கள் வெற்றி பெறும்.

துலாம்:

இந்த காலகட்டங்களில் முன்வைத்த காலை பின் வைக்க வேண்டாம். முருகன் அருளால் எல்லாம் தன்மையாக முடியும்.

விருச்சிகம்:

மனக்குழப்பங்கள் விலக வடபழனி செந்தில் ஆண்டவரே தரிசிப்பது தியானம் செய்வது இவர்களுக்கு ஆன்மீகத்தில் நல்ல வளர்ச்சியை கொடுக்கும்.

தனுசு :

நீண்ட நாள் மன துயர் விலக முருகப்பெருமானின் வேல் மற்றும் மயிலை அடிக்கடி காண்பது அல்லது முருகப்பெருமான் மந்திரங்களை பாராயணம் செய்வது சிறப்பான பலன் கொடுக்கும்.

ராகு குரு: அக்டோபர் வரை ஊரே பொறாமைப்படும் அளவு வாழபோகும் 4 ராசிகள் யார் ?

ராகு குரு: அக்டோபர் வரை ஊரே பொறாமைப்படும் அளவு வாழபோகும் 4 ராசிகள் யார் ?

மகரம்:

மனதில் இந்த காலகட்டங்களில் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். முருகப்பெருமான் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வது சிறப்பான பலன்களை பெற்றுக் கொடுக்கும்.

கும்பம்:

இந்த காலகட்டங்களில் பெரியவர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பது வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.

மீனம்:

பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் நிறைவேற தாமதமாகிறது என்று வருத்தம் கொள்ளாமல் கிடைக்கும் விஷயங்களில் சந்தோஷம் காண்பது அவசியம்.   


ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US