2026: 12 ஆண்டுகளுக்கு பிறகு தனது உச்ச வீட்டிற்கு செல்லும் குரு.. 12 ராசிகளுக்கும் எப்படி உள்ளது?
திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஜூன் இரண்டாம் தேதி குரு பெயர்ச்சி நடக்கிறது. 12 ஆண்டுகளுக்கு பிறகு குரு பகவான் அவருடைய உச்ச ராசியான கடக ராசிக்கு இடம் மாறுகிறார். குரு கடக ராசியில் அமர்ந்து தனது சுப பார்வைகளை 5, 7, 9 என விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளை பார்க்கிறார்.
மேலும், குரு பார்வை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசிக்கு குரு பகவான் நான்காம் வீடான சுகஸ்தானத்திற்கு வருவதால் இவர்களுக்கு இந்த காலகட்டங்களில் வீடு வாகனம் வாங்கக்கூடிய யோகம் உருவாகும். இருந்தாலும் தாயாரின் உடல் நலனில் சற்று கவனம் செலுத்த வேண்டும்.
ரிஷபம்:
இவர்களுக்கு குரு பகவான் மூன்றாம் வீட்டிற்கு வருவதால் இவர்களுடைய இளைய சகோதரர்களுடன் கருத்து மோதல்கள் ஏற்படலாம். இருப்பினும் குருவின் பார்வை 7, 9 11 ஆகிய இடங்களில் விழுவதால் வாழ்க்கையில் சந்தித்த தடைகள் விலகும்.
மிதுனம்:
இவர்கள் இப்பொழுது குரு இரண்டாம் வீடான குடும்பம் மற்றும் தனஸ்தானத்தை மாறுகிறார். இதன் காரணமாக இவர்களுக்கு பொருளாதார மிக உயரத்தை அடையும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். பிரிந்து வாழ்ந்த கணவன் மனைவிகள் ஒன்று சேர வாய்ப்புகள் உள்ளது.
கடகம்:
இவர்கள் ராசிகளில் குரு பகவான் உச்சம் ஆகிறார். இருப்பினும் ஜென்ம குரு என்பதால் மனதில் குழப்பங்களும் தேவையில்லாத பதட்டமும் ஏற்படலாம். பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம்.
சிம்மம்:
சிம்ம ராசிக்கு குரு பகவான் 12 வீடான விரைய ஸ்தானத்திற்கு செல்கிறார். இவர்களுக்கு இந்த காலகட்டங்களில் சுப விரய ஸ்தானமாக வீடு கட்டுதல், திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் கைகூடும்.

கன்னி:
இவர்கள் ராசிக்கு 11 ஆம் வீடான லாப ஸ்தானத்திற்கு குரு பகவான் வருகிறார். அதனால் இவர்களுக்கு பொருளாதாரத்தில் பெரிய அளவில் வளர்ச்சி கிடைக்கும். வேலையில் உயர் பதவியை அடைவார்கள். சம்பள உயர்வு உண்டாகும்.
துலாம்:
துலாம் ராசிக்கு குரு பகவான் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்திற்கு வருகிறார். 10- குரு வந்தால் பதவி மாற்றம் உண்டு. அதனால் இவர்களுக்கு இந்த காலகட்டங்களில் வேலையில் மாற்றங்கள் அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். உழைப்பு அதிகமாக இருக்கும்.
விருச்சிகம்:
இவர்களுக்கு குரு பகவான் ஒன்பதாம் வீடான பாக்கியஸ்தானத்திற்கு வருகிறார். அதனால் இவர்களுக்கு பொன்னான காலமாக தந்தை வழியே நல்ல நன்மைகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். தடைபட்ட காரியங்கள் நடக்கும்.
தனுசு:
இவர்களுக்கு குரு பகவான் எட்டாம் வீட்டிற்கு செல்வதால் செய்யும் விஷயங்களில் வேண்டும். தேவை இல்லாத வாக்குவாதங்களை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். இருப்பினும் உயில் சொத்துக்கள் போன்ற விஷயங்கள் கைகளுக்கு வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.
மகரம்:
குரு பகவான் ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்திற்கு வருகிறார். அதனால் இவர்களுக்கு நீண்ட நாட்களாக திருமண நடைபெறவில்லை என்று வருந்துபவர்களுக்கு திருமணம் கைகூடிவரும். கணவன் மனைவியுடைய நல்ல புரிதல் உண்டாகும்.
கும்பம்:
இவர்கள் ராசிக்கு குரு ஆறாம் வீட்டிற்கு வருவதால் மறைமுகமான எதிரிகள் மற்றும் தேவை இல்லாத கடன் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. வேலை செய்யும் இடங்களில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது அவசியம். போட்டி தேர்வுகளில் வெற்றி உன்டு.
மீனம்:
இவர்களுடைய ராசிநாதன குரு பகவான் இவர்களுடைய ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வருகிறார். ஆதலால், குடும்பத்தில் குழந்தை பாக்கியம் உண்டாகும். கலை மற்றும் விளையாட்டு துறையில் இருப்பவர்களுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். பூர்வீக சொத்தில் உள்ள சிக்கல் விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |