குரு- புதனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: அதிர்ஷ்டம் பெறும் டாப் 3 ராசிகள்!
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நவகிரகங்களின் பெயர்ச்சிக்கு ராசிபலன் கணிப்பில் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
காரணம் கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் முக்கிய கிரகங்கள் இணைவதால் ஏற்படும் ராஜயோகங்கள் என்பன 12 ராசிகளின் வாழ்க்கையிலும் நேரயாகவே ஆதிக்கம் செலுத்துவதாக நம்பப்படுகின்றது.

அந்தவகையில் ராஜ குருவான குருபகவான் எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் திகதி கிரகங்களின் இளவரசனான புதன் பகவானுடன் இணைவதால், நவபஞ்சம ராஜயோகத்தை உருவாக்கப்போன்றார்.
அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தினாலும், நிதி மற்றும் தொழில் ரீதியில் ராஜயோகத்தை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பாதிவில் பார்க்கலாம்.

ரிஷபம் : குரு புதனால் உருவாகும் இந்த அரிய நவபஞ்சம ராஜயோகத்தால் ரிஷப ராசியினர் நிதி நிலையில் அமோகமான வளர்ச்சியை பெறப்போகின்றார்கள்.
இவர்களின் தொழில் நிலையில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். குருவின் ஆசியால் பெரியளவில் பொன் பொருள் சேரக்கூடிய பிராப்தம் உண்டாகும்.
ஏப்ரல் மாதத்தின் ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பாராத அளவுக்கு பெரிய தொகை பணம் கைக்கு வரும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கடகம் : குரு புதனால் உருவாகும் இந்த நவபஞ்சம ராஜயோகத்தால் கடக ராசியினரின் பொருளாதார நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு முன்னேற்றம் ஏற்படப்போகின்றது.
புதிய தொழில் ஆரம்பிப்பதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. இந்த காலகட்டத்தில் பணவரவுக்கு பஞ்சமே இருக்காது.
குருவின் ஆசியால் வீட்டில் தங்கம் குவியும். முன்னைய முதலீடுகளில் இருந்து எதிர்ப்பாராத வகையில் லாபம் உண்டாகும்.
தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகமானது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, தொழில் வாழ்க்கையிலும் சரி நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள்.
வாழ்க்கைத் துணையுடன் இதுவரையில் இருந்து வந்த கருத்து வேறுப்பாடுகள் நீங்கி திருமண வாழ்க்கையில், மகிழ்ச்சி உண்டாகும். பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் இணைந்து வாழும் சூழல் உருவாகும்.
வருமானத்துக்கான புதிய பாதைகள் திறக்கும். புதிய சொத்து அல்லது வாகனம் வாங்குவதற்கான பிராப்தம் உண்டாகும்.