கடன் பிரச்சனை கரைந்து போக அமாவாசை அன்று செய்யவேண்டிய பரிகாரம்

By Yashini May 07, 2024 07:57 AM GMT
Report

பொதுவாக செவ்வாய்க்கிழமை என்றாலே கடனை திருப்பி அடைப்பதற்கு உகந்த நாள்.

அந்த நாளோடு அமாவாசை திதி சேர்ந்திருப்பதால், இந்த நாளில் நாம் செய்யக்கூடிய கல்லுப்பு பரிகாரம் நமக்கு பல மடங்கு பலனை தரும்.

அந்தவகையில், அமாவாசையான இன்றைய தினம் கடன் கரைய கல் உப்பு பரிகாரத்தை பற்றி பார்க்கலாம். 

செவ்வாய் ஹோரை நேரமான 1:00 மணியிலிருந்து 2:00 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

கடன் பிரச்சனை கரைந்து போக அமாவாசை அன்று செய்யவேண்டிய பரிகாரம் | Kadan Karaiya Uppu Pariharam

ஒரு கண்ணாடி டம்ளரில் சுத்தமான தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய இரண்டு உள்ளங் கைகளிலும் நிரம்பக் கல்லுப்பை எடுக்க வேண்டும்.

எடுத்து கல்லுப்பை கொஞ்சம் இறுக்கமாக பிடித்துக் கொள்ளுங்கள். அந்த கல்லுப்பு உங்களுடைய உள்ளம் கைகளில் லேசாக குத்த வேண்டும்.

கல்லுப்பின் அச்சு உங்களுடைய உள்ளங்கைகளில் படிய வேண்டும். அந்த அளவுக்கு அழுத்தம் கொடுத்து உப்பை உள்ளங்கைகளில் பிடித்துக் கொண்டு, இறைவனிடம் மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.

என்னுடைய கடன் சுமையெல்லாம் சீக்கிரம் கரைந்து போக வேண்டும் என்ற பிரார்த்தனையை வைத்துவிட்டு, கல் உப்பை கண்ணாடி டம்ளர் இருக்கும் தண்ணீரில் கரைத்து விட வேண்டும்.

கடன் பிரச்சனை கரைந்து போக அமாவாசை அன்று செய்யவேண்டிய பரிகாரம் | Kadan Karaiya Uppu Pariharam

உங்கள் கையாலேயே அந்த கல்லுப்பை நன்றாக கரைத்து விடுங்கள். முதலில் இடது கையில் இருக்கும் கல் உப்பை போட்டு கரையுங்கள். 

பிறகு வலது கையில் இருக்கும் கல் உப்பை போட்டு கரையுங்கள். இந்த கல்லுப்பு தண்ணீரில் எப்படி கரைகிறதோ, அதேபோல என்னுடைய கடன் சுமை காணாமலேயே போய்விடும்.

இந்த பரிகாரத்தை செய்து முடித்துவிட்டு  நீங்கள் யார்கிட்ட கடன் வாங்கி இருக்கீங்களோ, அவங்களுக்கு ஒரு தொகையை திருப்பிக் கொடுக்கணும்.

அப்படி இல்லை என்றால் ஒரு வெள்ளை கவரில் அந்த நபரின் பெயரை எழுதி, அந்த கவரில் 100 ரூபாயை போட்டு வையுங்கள். அந்த நபருக்கு கடனை திருப்பிக் கொடுத்ததாக அர்த்தம்.

நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்யுங்கள். நல்லதே நடக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 

 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US