தடைகள் விலக கால பைரவர் வழிபாடு

By Sakthi Raj Jun 01, 2024 06:30 AM GMT
Report

ஞாயிற்றுக்கிழமை ராகுகால வழிபாட்டு நேரத்தில் நெய் தீபம் முப்பது வாரங்கள் ஏற்றி வர திருமணம் முடிவுக்கு வரும். ஏவல் பில்லி சூனியம் போன்ற துஷ்ட காரியங்களின் தாக்கம் குறைய வேண்டுமா?

தடைகள் விலக கால பைரவர் வழிபாடு | Kalabairavar Poojai Thirumana Thadai Valipadu News

பைரவர் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் ஆலயங்கள் சென்று முறையாக அங்கு நடைபெறும் வழிபாடுகளை கடை பிடிப்பதால் இதுபோன்ற கஷ்டங்கள் விலகும்.

சிறப்பான பைரவர் தலங்களை இணைப்பில் காணவும். சத்துரு உபாதைகள் நீங்கவும் வழக்குகளில் வெற்றி பெறவும் வேண்டுமா?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (1.06.2024)

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (1.06.2024)


பைரவருக்கு இரவு நேர பூஜையும் செவ்வாய், வெள்ளி நாட்களில் யாகமும் சிறந்த பலனைக் கொடுக்கும்.

முழு மனதுடன் ஈடுபடும் பைரவர் பூஜை சத்ருக்களின் தொல்லை களை நீக்கிவிடும். தேன், உளுந்து வடை நிவேதனம் செய்ய வேண்டும்.

ஆபத்துக்கள் விலக என்ன செய்யலாம்? கால பைரவ அஷ்டகத்தை தொடர்ந்து படிப்பதாலும், சிகப்பு அரளி மலரால் அர்ச்சிப்பதாலும், ஏற்பட இருக்கும் ஆபத்துகள் நிகழாமல் தடுக்கப்படும்.

தடைகள் விலக கால பைரவர் வழிபாடு | Kalabairavar Poojai Thirumana Thadai Valipadu News

மேலும் தினசரி 9 முறை 12 நாட்களுக்கு தொடர்ந்து படிக்க எதிரிகள் அஞ்சுவார்கள். ஆணவங்களை அழிக்கும் பைரவர் உங்களுக்கு எதிராக ஏற்படும் இன்னல்களை நீக்குவார். 12 நாள் முடிவில் முடிந்தால் ஒன்பது நபர்களுக்கு அன்னதானம் செய்யவும்

. சனிக்கிழமைகளில் 6 எண்ணை தீபம் தொடர்ந்து 6 வாரங்கள் ஏற்றி சனீஸ்வரரை வணங்குவதால் எதிர்ப்புகள் நீங்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US