இறந்தவர்கள் கனவில் வந்தால் இதுதான் அர்த்தமாம்

By Yashini Jun 06, 2024 02:53 AM GMT
Report

1. இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல செய்தி வரும் மேலும் நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள் என்று பொருள்.

2. இறந்தவர்கள் கனவில் வந்து நம்மை ஆசிர்வதிப்பது போல கனவு கண்டால் எல்லா விதமான நன்மையும் ஏற்படும் என்று அர்த்தம்.

3. இறந்தவர்கள் நம் கனவில் வந்து அழுவது போல கனவு கண்டால் நல்லதல்ல, கோவிலில் அர்ச்சனை செய்வது நல்லது.

4. இறந்தவர்களுடன் பேசுவது போல் கனவு கண்டால் பெயரும், புகழும் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.

5. இறந்து போனவர்கள் உங்கள் வீட்டில் தூங்குவதை போல கனவு கண்டால் பெரிய கண்டத்தில் இருந்து தப்பிப்பீர்கள் என்று பொருள்.

இறந்தவர்கள் கனவில் வந்தால் இதுதான் அர்த்தமாம் | Kanavu Palangal In Tamil

6.சவபெட்டியை கனவில் கண்டால் நமக்கு நெருங்கியவர்கள் இறக்க போகிறார்கள் என்று அர்த்தம்.

7. இறந்தவர்கள் உங்களுடன் சாப்பிடுவது போல கனவு கண்டால் நற்புகழும் அதன் காரணமாக செல்வ செழிப்பும் ஏற்படும்.

8. இறந்தவர்கள் உங்களிடம் பேசுவது போல கனவு வந்தால் இக்கட்டான நிலையில் உங்களுக்கு உதவ சிலர் வருவார்கள் என்று பொருள்.

9. நாமே இறந்து விட்டது போல் கனவு வந்தால் நம்முடைய ஆயுள் கூடும்.

10. நமக்கு வேண்டப்பட்ட யாராவது இறந்துவிட்டது போல கனவு வந்தால் துன்பங்கள் விலக போகிறது என்று அர்த்தம்.

11. இறந்து போனவர்களை தூக்கி செல்வது போல கனவு வந்தால் நன்மை உண்டு.  

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.  


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US