2026 கந்த சஷ்டி விரதம்: முருகப்பெருமானுக்கு 6 நாட்களும் என்ன நெய்வேத்தியம் படைக்க வேண்டும்?

By Sakthi Raj Nov 04, 2026 01:00 PM GMT
Report

முருகப்பெருமானின் அருளை பெறுவதற்கு ஆண்டுதோறும் பக்தர்கள் கடுமையாக விரதம் இருந்து வழிபாடு செய்யக்கூடிய முக்கியமான வீரதுங்களில் கந்த சஷ்டி விரதம் ஒன்று. முருகப்பெருமான் சூர பத்மனை வதம் செய்து தேவர்களை காத்தருளிய தெய்வீக நிகழ்வை நினைவு கூறும் வகையில் இந்த விழா திகழ்கிறது.

இந்த ஆறு நாட்கள் நடைபெறும் இந்த விரதமும் வழிபாடும் பக்தர்களுக்கு மன உறுதியையும் முருகப்பெருமானின் பரிபூரண அருளையும் பெற்றுக் கொடுக்கிறது.

2026 ஆம் ஆண்டு கந்த சஷ்டி விழா நவம்பர் 10ஆம் தேதி துவங்கிய நவம்பர் 15ஆம் தேதி சூரசம்ஹாரத்துடனும் நவம்பர் 16ஆம் தேதி திருக்கல்யாண உற்சவத்துடன் நடைபெற இருக்கிறது. இந்த ஆறு நாட்களும் முருகப்பெருமானுக்கு எந்தெந்த நெய்வேத்தியம் படைக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

2026 கந்த சஷ்டி விரதம்: முருகப்பெருமானுக்கு 6 நாட்களும் என்ன நெய்வேத்தியம் படைக்க வேண்டும்? | Kanda Sashti 6 Day Offerings To Lord Murugan List

2026 தீபாவளி சிறப்பு பட்டிமன்றம்: பக்தியில் சிறந்து விளங்குபவர் ஆண்களா? பெண்களா?

2026 தீபாவளி சிறப்பு பட்டிமன்றம்: பக்தியில் சிறந்து விளங்குபவர் ஆண்களா? பெண்களா?

முதல் நாள் கோதுமை கேசரி:

கந்தசஷ்டி விரதத்தின் முதல் நாள் கோதுமை கேசரி முருகப்பெருமானுக்கு படைக்கலாம், நெய், ஏலக்காய் மனதுடன் தயாரிக்கப்படும் இந்த நெய்வேத்தியம் படைத்து வழிபாடு செய்வது சிறப்பு.

இரண்டாம் நாள் பருப்பு பாயாசம்:

இரண்டாம் நாள் வெல்லம், பருப்பு, தேங்காய் பால் சேர்த்து செய்யப்படும் இந்த பாயாசத்தை நாம் படைத்து வழிபாடு செய்யலாம்.

மூன்றாம் நாள் எலுமிச்சை சாதம்:

மூன்றாம் நாள் எலுமிச்சை சாதம் செய்து முருகப்பெருமானுக்கு நெய்வேத்தியம் செய்யலாம். மஞ்சள் நிறத்தில் மணமுடன் தயாரிக்க கூடிய இந்த சாதத்தை படைத்து வழிபாடு செய்யலாம்.

நான்காம் நாள் தேங்காய் சாதம்:

தேங்காயின் மணதுடன் தயாரிக்க கூடிய எளிய உணவை நெய்வேத்தியமாக படைத்து வழிபாடு செய்யலாம். ஐந்தாம் நாள் தேன் கலந்த திணை மாவு: ஐந்தாம் நாளில் தேனும் திணை மாவும் கலந்து தயாரிக்க கூடிய உணவை முருகப்பெருமானுக்கு படைத்து வழிபாடு செய்யலாம்.

2026 கந்த சஷ்டி விரதம்: முருகப்பெருமானுக்கு 6 நாட்களும் என்ன நெய்வேத்தியம் படைக்க வேண்டும்? | Kanda Sashti 6 Day Offerings To Lord Murugan List

2026 ராகு கேது பெயர்ச்சி: 6 ராசிகளுடைய வாழ்க்கையே மாறப் போகிறதாம்

2026 ராகு கேது பெயர்ச்சி: 6 ராசிகளுடைய வாழ்க்கையே மாறப் போகிறதாம்

ஆறாம் நாள் தயிர் சாதம் அல்லது ஆறு வகை சாதம்:

சூரசம்கார நாளான ஆறாம் நாளில் தயிர் சாதம் அல்லது ஆறு வகையான சாதனங்களை தயாரித்து வழிபாடு செய்யலாம்.

ஏழாம் நாள் திருக்கல்யாண விருந்து படையல்:

நவம்பர் 16ஆம் தேதி நடைபெறக்கூடிய திருக்கல்யாண உற்சவம் முன்னிட்டு முருகப்பெருமானுக்கு வள்ளி தெய்வானைக்கும் சிறப்பு உணவு படையல் செய்து வழிபாடு செய்யக்கூடிய மரபுகள் பின்பற்றப்பட்டு வருகிறது.

மேல் குறிப்பிடப்பட்டுள்ள நெய்வேத்திய பட்டியல் ஒரு வழிகாட்டுதலே தவிர இதை தான் கட்டாயமாக நாம் படைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்ற எந்த ஒரு நிபந்தனையும் இல்லை. ஒவ்வொருவருடைய குடும்ப வழக்கம், அவர்களுடைய வசதி, உடல்நிலை ஏற்ப எளிய உணவு, பழம், பால், கற்கண்டு போன்றவற்றையும் பக்தியுடன் படைத்து நிச்சயமாக முருகப்பெருமானை வழிபாடு செய்யலாம். 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US