கன்னியாகுமரியில் ஒரு மீனாட்சி அம்மன்

Report

பாண்டிய நாட்டு இளவரசியாக பாண்டிய மன்னர்களின் குலதெய்வமான மதுரை மீனாட்சியம்மனுக்கு மதுரையில் மட்டும் தான் கோயில் இருக்கிறது என்று நினைத்து கொண்டு இருக்கின்றோம்.

அனால் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் மீனாட்சி அம்மாவிற்கு கோயில் உள்ளது.அதை பற்றி பார்ப்போம்.

தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற கோயில்களில் மீனாட்சி அம்மன் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது அப்படியாக அந்த அம்மன்கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியிலும் கோயில் இருப்பது பலருக்கு தெரியாது தகவல். இக்கோயிலில் ஆவணி மூலத்திருவிழா சிறப்பாக நடைபெறும்.

அதாவது பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையின் மீது அந்நியர்கள் படையெடுப்பு அடிக்கடி நடந்தது.

கன்னியாகுமரியில் ஒரு மீனாட்சி அம்மன் | Kanyakumari Meenatchi Amman Aralvaimozhi Koyil

அதனால் மீனாட்சியம்மன் உற்சவர் சிலை, ஆபரணங்களை பாதுகாப்பாக வைக்க ஆரல்வாய்மொழியை தேர்ந்தெடுத்தனர். ஆரை, ஆரல் என்பது கோட்டை மதில் சுவரைக் குறிக்கும்.

இப்பகுதிக்கு அரணாக இருந்த பொதிகை மலைக்கு 'ஆரல்வாய் வழி' என்று பெயர். தற்போது 'ஆரல்வாய் மொழி' எனப்படுகிறது.

முன்பு இங்கு பரகண்ட சாஸ்தா சன்னதி இருந்த இடத்தில் மதுரையில் எடுத்து வந்த மீனாட்சி அம்மன் சிலையை பாதுகாத்தனர்.

கன்னியாகுமரியில் ஒரு மீனாட்சி அம்மன் | Kanyakumari Meenatchi Amman Aralvaimozhi Koyil

தற்போது அங்கு தெற்கு நோக்கிய சன்னதியுடன் கோயில் உருவாக்கப்பட்டது. இங்கு பங்குனி திருவிழாவின் போது குதிரை மீது சாஸ்தா சுற்றி வரும் 'தம்புரான் விளையாட்டு' நிகழ்ச்சி நடைபெறும்.

பைரவர் சன்னதியில் பாட வேண்டிய பாடல்

பைரவர் சன்னதியில் பாட வேண்டிய பாடல்

வாழ்க்கை ஒரு சக்கரம் அதை தர்மம் இயக்குகிறது என்பதை இது நினைவுபடுத்துகிறது. முன்மண்டபத் துாணில் ஆவணி மூலத்திருவிழாவை ஏற்படுத்திய திருவிதாங்கூர் மன்னரின் சிலை உள்ளது.

கோயிலின் அருகில் தெப்பக்குளம் உள்ளது. விநாயகர், முருகன், விஸ்வநாதர், தட்சிணாமூர்த்தி, பைரவர், பூதத்தார் சன்னதிகள் உள்ளன.

அருகில் முருகன், அவ்வையார் கோயில்கள் உள்ளன. மதுரை ஆளும் அரசியை ஒரு முறை முடிந்தால் கன்னியகுமாரியிலும் சந்தித்து வருவோம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US