நேர்மறை ஆற்றல் பெருக வீட்டில் கற்பூரம் ஏற்றும் முறை
நம்முடைய வீடு எப்பொழுதும் நேர்மறை ஆற்றல் கொண்டு இருக்க வேண்டும்.இல்லை என்றால் வீட்டில் நிதி நெருக்கடிகள்,சண்டை போன்ற எதிர்மறை விஷயங்களை சந்திக்க நேரிடும்.
அப்படியாக நம் வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகி வளமாக வாழ செய்யவேண்டிய விஷயங்கள் பற்றி பார்ப்போம்.
நம்முடைய வீட்டில் நேர்மறை மறை ஆற்றல் சூழ தினமும் கற்பூரம் ஏற்ற வேண்டும்.இவ்வாறு ஏற்றும் பொழுது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் முற்றிலுமாக விலகும்.அதோடு தீய சக்திகள் நடமாட்டம் இருந்தாலும் அதுவும் மொத்தமாக விலகும்.
அதே போல் சிலரது வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இருக்கும்.அவர்கள் கட்டாயம் கற்பூரம் ஏற்றினால் அவர்களுக்கு வஸ்துவால் உண்டாகும் தோஷம் படிப்படியாக விலகும்.
சிலர் வீட்டில் திடீர் பண நெருக்கடிகள் உருவாகி இருக்கும்.அவர்களும் தினமும் கற்பூரம் ஏற்றினால் நல்ல மாற்றங்களை பெறலாம்.விரைவில் கடன் பிரச்சனையில் இருந்து வெளியே வரலாம்.
வியாபார இடங்களில் தினமும் மாலை வேலை கற்பூரம் ஏற்றினால் கட்டாயம் அவர்கள் வியாபரம் நல்ல வளர்ச்சி அடையும்.
ஒரு மனிதனைமிகவும் பாதிப்புக்குள்ளாக்கும் செயலாக கண்திருஷ்டி இருக்கிறது.ஆக மாலை வேலையில் கற்பூரத்தோடு சேர்த்து கிராம்பு கொண்டு ஏற்றி வர எப்பேர்ப்பட்ட கண்திருஷ்டியும் விலகும்.
மேலும் ஆன்மிகம் அல்லாமல் அறிவியல் ரீதியாக பார்த்தாலும் வீட்டில் கற்பூரம் ஏற்ற வீட்டில் உள்ள கிருமிகள் மற்றும் பூச்சிகள் விலகுவதாக சொல்லப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |