ராகுவுடன் இணையும் சூரியன்-இனி இந்த 4 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை
மார்ச் 14 ஆம் தேதி, சூரிய பகவான், மீன ராசியில் பயணம் செய்ய உள்ளார். ஏற்கனவே மீன ராசியில் இருக்கும் ராகுவுடன் இணைவதால், கிரகண யோகம் உருவாகிறது. இந்த யோகம் குருவின் வீடான மீன ராசியில் உருவாகுவது,4 ராசிகளுக்கு மிகுந்த நன்மைகளை வழங்க உள்ளது.
இந்த மார்ச் மாதத்தில் சூரியன் மட்டுமின்றி, சனி, புதன் போன்ற முக்கிய கிரகங்களும் ராசி மாற்றம் செய்வதால், இந்த மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மேலும், பல கிரக சேர்க்கைகளும் இந்த மாதம் நிகழ்வதால், சுப மற்றும் அசுப பலன்கள் ஏற்படும்.
தற்போது கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சூரிய பகவான், மார்ச் 14ஆம் தேதி மீன ராசிக்குள் பிரவேசிக்கிறார். இந்த மீன ராசி சங்கராந்தி,ராசிகளுக்கும் பலன் கொடுத்தாலும் குறிப்பிட்ட 4 ராசிகளுக்கு சிறப்பான பலன் கொடுக்க உள்ளது.அதை பற்றி பார்ப்போம்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்கு,சூரியனின் அருளால் நிதி சம்பந்தமான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகரிப்பீர்கள்.வியாபாரத்தில் முதலீடு செய்வதால் நல்ல லாபம் பெறுவீர்கள்.சந்தோஷமான சூழல் உருவாகும்.
மிதுனம்:
மிதுன ராசிக்கு, சூரியனின் அருளால் புது வீடு வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.உங்கள் சிந்தனை நேர்மறையாக மாறும்.சிலருக்கு சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கும்.வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் பெறுவீர்கள்.
கடகம்:
கடக ராசிக்கு, சூரியனின் அருளால் உடல் ஆரோக்கியம் சீராகும்.வெளிநாடு செல்லவேண்டும் என்று முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.சொத்து தொடர்பான விஷயங்களில் உள்ள சிக்கல்கள் விலகும்.சமுதாயத்தில் உங்கள் மதிப்பு உயரும்.
தனுசு:
தனுசு ராசிக்கு, சூரியனின் அருளால் வாழ்க்கையில் புதிய அனுபவங்கள் உண்டாகும்.வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.குடும்பத்தில் சுப காரியம் நடைபெறும்.உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |