பழைய அகல் விளக்குகளை கார்த்திகை தீபம் அன்று ஏற்றலாமா?

By Sakthi Raj Dec 10, 2024 05:43 AM GMT
Report

தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதம் மிகவும் ஒளி நிறைந்த மாதம்.அந்த மாதம் தான் அனைவரது வீட்டில் முன் வாசலில் 30 நாட்களும் தீபம் ஏற்றி மிக சிறந்த வழிபாடு செய்வார்கள்.மேலும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெறும்.

வீட்டில் தினமும் விளக்கு ஏற்றினாலும் திருக்கார்த்திகை அன்று வீடு முழுவதும் நாம் நிறைய அகல் விளக்குகளை ஏற்றுவோம்.அந்த வகையில் பலருக்கும் பழைய விளக்குகளை நாம் ஏற்றலாமா என்ற சந்தேகம் இருக்கும்.

அதே போல் விளக்குகள் எந்த எண்ணிக்கையில் ஏற்ற வேண்டும் என்ற குழப்பமும் இருக்கும்.அதை பற்றி பார்ப்போம். நாம் திருக்கார்த்திகை அன்று திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயிலில் தீபம் ஏற்றிய பிறகே இங்கு அனைவரது வீட்டிலும் விளக்குகள் ஏற்றுவோம்.

பழைய அகல் விளக்குகளை கார்த்திகை தீபம் அன்று ஏற்றலாமா? | Karthigai Deepam 2024 Vazhipadu

பொதுவாக நாம் கார்த்திகை தீபத்திற்கு வெள்ளி, தங்கம், பஞ்சலோகம் என எந்த விளக்குகள் ஏற்றினாலும் மண் அகல் விளக்கு ஏற்றுவது சிறந்த பலன்களை கொடுக்கும்.காரணம்,இதன் அடிபாகத்தில் பிரம்மாவும், தண்டு பாகத்தில் மகாவிஷ்ணுவும் நெய் அல்லது எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமானும் வாசம் செய்வதாக ஐதீகம்.

ஆதலால் மண் அகல் விளக்கில் விளக்கு ஏற்றும் பொழுது வீட்டில் பண கஷ்டங்கள் விலகி செல்வ வளம் பெருகும். என்னதான் நம் வீட்டில் அதிக அளவில் அகல் விளக்குகள் இருந்தாலும் கார்த்திகை தீபம் ஒவ்வொரு வருடமும் புதிய அகல் விளக்குகள் வாங்கும் பழக்கம் எல்லோரிடத்திலும் இருக்கும்.

கார்த்திகை மாதம் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்: என்ன தெரியுமா?

கார்த்திகை மாதம் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்: என்ன தெரியுமா?

அப்படியாக பழைய விளக்குகளை என்ன செய்வது?அவை பயன் படுத்தலாமா?என்றால் கட்டாயம் பயன் படுத்தலாம்.ல் பழைய அகல் விளக்குகளை கொதிக்கும் தண்ணீரில் போட்டு,விளக்கு தேய்க்கும் பொடியையும் போட்டு நன்றாக அதில் ஊறவைக்க வேண்டும்.

இவ்வாறு செய்யும் பொழுது அதில் படிந்த எண்ணெய் பிசுபிசுப்புகள் விலகி விடும்.பிறகு அந்த விளக்குகளை எடுத்து நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.ஒருவேளை புதிய அகல் விளக்குகளை வாங்கி வந்தால், அவைகளையும் ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி விளக்குகளை 4 மணி நேரமாவது ஊறவைக்க வேண்டும்.

இதனால் விளக்குகளில் ஊற்றப்படும் எண்ணெய் கசிந்துவிடாமல் இருக்கும். 4 மணி நேரம் கழித்து விளக்குகளை நன்றாக தேய்த்து கழுவி, காயவைத்து எடுத்து கொள்ள வேண்டும். இந்த காய்ந்த மண் அகல் விளக்குகளில், திரி போடும் இடத்தை தவிர, மற்ற அனைத்து இடங்களிலும் சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும்.

பழைய அகல் விளக்குகளை கார்த்திகை தீபம் அன்று ஏற்றலாமா? | Karthigai Deepam 2024 Vazhipadu

மேலும் விளக்குகளில் பல முகம் கொண்ட விளக்குகள் இருக்கிறது.அப்படியாக ஒரு முகம் விளக்கு ஏற்றினால், நினைத்த செயல்கள் நடக்கும்,2 முகம் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை கூடும்,3 முகம் ஏற்றினால், புத்திரதோஷம் நீங்கும். 4 முகம் ஏற்றினால் பசு, பூமி, செல்வம், சர்வபீடை நிவர்த்தி ஆகும்.

5 முகம் ஏற்றினால், சகலநன்மையும், ஐஸ்வர்யம் பெருகும் என்பார்கள். அதே போல் விளக்கு ஏற்றும் பொழுது திசைகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.அதாவது நாம் வீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது ஒவ்வொரு திசைகளும் ஒவ்வொரு பலன் கொடுக்கும்.

நாம் கிழக்கு திசையில் விளக்கு ஏற்றும் பொழுது குடும்பத்திலுள்ள துன்பங்கள், இன்னல்கள் நீங்கும்.மேற்கு திசையில் விளக்கு ஏற்ற தீராத கடன் தொல்லை தீரும்.வடக்கு திசையில் விளக்கு ஏற்ற குடும்பத்தில் உண்டான தடைகள் விலகும்.

ஆனால், எக்காரணம் கொண்டும் தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது.மேலும் விளக்கு ஏற்றும் பொழுது குறிப்பிட்ட இடங்களில் நாம் விளக்கு ஏற்றுவது அவசியம்.வீட்டு முற்றத்தில் 4 விளக்கும், சமையல் கூடத்தில் ஒரு விளக்கும், நடையில் இரண்டு விளக்கும், பின்கட்டில் 4 விளக்கும், திண்ணையில் 4, மாட குழியில் இரண்டு, நிலைப்படிக்கு 2, சாமி படத்துக்கு கீழே இரண்டு, வெளியே யம தீபம் ஒன்று, திருக்கோலம் இடத்தில் 5 என மொத்தம் 27 விளக்குகள் ஏற்றப்படவேண்டுமாம்.

அதாவது இந்த 27 விளக்குகளும், 27 நட்சத்திரங்களை குறிக்கக்கூடியது.இவ்வாறு விளக்குகள் ஏற்ற வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் விலகும்.மேலும் நமக்கும் மன அமைதி கிடைக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US