கார்த்திகை மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
சூரிய பகவான் முப்பது நாட்களுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவார். ஒவ்வொரு ராசிக்கு மாறும்போது தமிழ் மாதம் பிறக்கும். அந்த வகையில் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு சூரிய பகவான் பெயர்ச்சியாகி சஞ்சரிக்கக் கூடிய காலம் கார்த்திகை மாதம் ஆகும்.
இந்த மாதத்தில் சூரியனின் அமைப்பு மற்றும் பிற கிரகங்களால் சில ராசிகளுக்கு சில தடங்கல் மற்றும் தடைகள் உருவாக வாய்ப்புள்ளது.ஆதலால் கார்த்திகை மாதத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டிய ராசிகளை பற்றி பார்ப்போம்.
மேஷம்
இந்த கார்த்திகை மாதத்தில் மேஷ ராசி நேயர்கள் புதிய முயற்சிகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது.அலுவலகத்தில் அளவுக்கு அதிகமாய் வேலைகளை எடுத்து செய்வதால் மன உளைச்சலுக்கு ஆளாகலாம்.வியாபாரத்தில் எவ்வளவு முயற்சி செய்யதாலும் உழைப்பு ஏற்ப வருமானம் கிடைக்கமால் போகலாம்.குடும்பத்தில் கணவன் மனைவி இடையே தேவை இல்லாத கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம்.தொழில் சம்பந்தமான வெளியூர் பயணம் சரியான ஆதாயம் கொடுக்காமல் போகலாம்.
கன்னி
இந்த கார்த்திகை மாதம் கன்னி ராசி நேயர்களுக்கு வேலையில் அவ்வளவு திருப்தி கரமாக இருக்காது.வியாபாரத்தில் சில பிரச்சனைகள் சந்திக்க வாய்ப்புள்ளதால் கவனமாக இருப்பது அவசிய. உடன்பிறந்தவர்களுடன் தேவையற்ற மன வருத்தம் ஏற்படும். உறவில் மனக்கசப்புகள் ஏற்படும். வேலைக்காக வெளியூர் பயணம் செல்ல நேரலாம்.அதனால் உடல் உபாதைகளுக்கு ஆளாக கூடும்.வரவுக்கு அதிகமான செலவு இருக்கும்.காதல் உறவில் விரிசல் ஏற்படக்கூடும்.சிலருக்கு மூட்டு வலி, தசைப் பிடிப்பு, செரிமான கோளாறுகள் இருக்க வாய்ப்புள்ளது.
தனுசு
இந்த கார்த்திகை மாதம் தனுசு ராசி நேயருக்கு அதிக அலைச்சல் ஏற்படும்.நீண்ட நாள் எதிர்பார்த்த பணம் கைக்கு வராமல் போகலாம்.குடும்பத்தில் தேவையற்ற மனக்கசப்புகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.பிள்ளைகள் ஆரோக்கியத்தில் சில உடல் பிரச்சனைகள் உருவாகக்கூடும்.புதிய விஷயம் எதுவாக இருந்தாலும் அதை தொடங்குவதை தள்ளி போடுவது நல்லது.வீண் பேச்சுக்களை தவிர்ப்பதால் பிரச்சனையில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ளலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |