இந்த ஒரு அம்மன் படம் வீட்டில் இருந்தால் கண் திருஷ்டியே நெருங்காதாம்
கண் திருஷ்டி என்பது மனிதர்களுடைய தீய எண்ணங்களால் ஒருவருக்கு ஏற்படக்கூடிய ஒரு தீய விளைவுகள் ஆகும். அப்படியாக எல்லாரும் இந்த கண்திருஷ்டியை போக்க பல வழிமுறைகளை கடைப்பிடிக்கிறார்கள். எள்ளலும், கட்டாயமாக இந்த கண்திருஷ்டி ஆனதை ஒவ்வொருவரும் தங்களுடைய வீடுகளில் வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒருமுறை கழித்து விடுவார்கள்.
அப்பொழுதுதான் அவர்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைமையில் இருக்க முடியும். அந்த வகையில் ஆன்மீக ரீதியாக கண் திருஷ்டி கழிப்பதற்கு நிறைய வழிமுறைகள் சொல்லியிருக்கிறார்கள்.
அதில் குறிப்பிட்ட இந்த ஒரு அம்மன் படம் வீடுகளில் இருந்தால் கட்டாயமாக அந்த வீட்டிற்கு கண் திருஷ்டியால் எந்த ஒரு பாதிப்பும் வராது அதோடு வற்றாத செல்வமும்கிடைக்குமாம். அதைப்பற்றி பார்ப்போம் பொதுவாகவே இந்து மதத்தில் மீன் என்பது செல்வத்தின் அடையாளமாக இருக்கிறது. அந்த மீன் மீது அம்பாள் வீற்றிருப்பது போன்ற திருக்கோலம் ஒரு அபூர்வமான மற்றும் விசேஷமானதாக கருதப்படுகிறது.
இந்த அம்பிகையின் படம் ஒருவருடைய வீடுகளில் இருக்க கட்டாயமாக அவர்கள் வீட்டில் செல்வம் குறையாமல் எல்லா வளமும் கிடைத்து சந்தோஷமாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாகும் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த அம்பிகையை "ஐஸ்வர்ய மகா கௌரி" என்றும் ஞான நூல்களில் போற்றப்படுகின்றன.
அதோடு, அகத்திய மாமுனிவரும் ஐஸ்வர்ய மகா கௌரி வழிபாடு குறித்து அருளியுள்ளார். அதாவது, முன்பு ஒரு முறை பெரிய ஊழி ஏற்பட்டது. அந்த ஊழி காலம் முடிந்த பிறகு இயல்பாக படைப்புகள் நிகழ்ந்தன. அப்பொழுது கடல் நடுவே சுவர்ணலிங்கம் தோன்றியது. தேவர்களும் முனிவர்களும் அசுரர்களும் நாகர்களும் அதை வணங்கி போற்றி வழிபாடு செய்தனர்.
அந்த லிங்கத்திலிருந்து பொன் மேனியராக சிவபெருமான் வெளிப்பட்டார். அவரை தழுவி சக்தி தேவையும் தோன்றினார். அவரை தேவர்கள் " சுவர்ண வல்லி" என போற்றி வழிபாடு செய்தார்கள். கடல் அரசனும் நாகலோக வாசிகளும் அந்த அம்பிகையை தங்கள் உலகிற்கு வந்து தங்கும்படி வேண்டினார்கள். அம்பிகையும் பாதாள லோகம் சென்று தங்கினாள்.
அங்கு அம்பிகையின் அருளால் தங்கம், இரும்பு, வெள்ளி முதலான உலோகங்கள் மிகச் சிறப்பாக விளைந்தது. இதற்குப் பிறகு தேவர்கள் ஒரு முறை செல்வம் வேண்டி தவம் செய்தார்கள். அவர்களுக்கு அருளும் வகையில் பாதாளத்திலிருந்து அம்பிகை தோன்றினாள். கடல் பரப்பில் பெரிய மீன் மீது அமர்ந்த நிலையில் அம்பிகை "ஸ்வர்ண மஹா கௌரியாக" காட்சி கொடுத்தாள்.
அன்னை அவளுடைய திருகரங்களில் ஞானத்தை குறிக்கும் தாமரை, போகத்தை குறிக்கும் நீலோற்பல மலர், நோயற்ற வாழ்வுடன் ஆயுள் விருத்தியை தரும் அமிர்த கலசம் செல்வங்களின் வடிவமான பண பேழை ஆகியவற்றை ஏந்தியபடி காட்சி கொடுத்தாள். அந்த அம்பிகையை வணங்கிய எல்லோருக்கும் வற்றாத மற்றும் அள்ள அள்ள செல்வம் பெருகிக்கொண்டே இருந்தது.

இந்த அற்புத வடிவை பொன்னால் செய்து அனைவரும் வழிபாடு செய்ய தொடங்கினார்கள். பிறகு அந்த அம்மனை ஐஸ்வர்ய கெளரியாக வழிபாடு செய்து வருகிறார்கள். ஆதலால் இந்த அம்பிகையின் படம் வீடுகளில் இருக்க செல்வம் வற்றாமல் சேர்ந்து கொண்டே இருக்கும். அதே போல் நீண்ட நாள் கடன் பிரச்சனை இருந்தால் அவை வந்த வழி தெரியாமல் அடைந்து விடும்.
அதுமட்டுமல்லாமல் கண் திருஷ்டி நம் வீட்டை நெருங்கவே நெருங்காது. அதேசமயம் குலதெய்வ அருளும் நமக்கு இந்த அம்பிகையை வழிபாடு செய்வதால் குறைவின்றி கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.
இந்த அம்பிகையை ஆவணி மாதம் வரக்கூடிய வளர்பிறை திதியில் வழிபாடு செய்வது மிகவும் விசேஷமாகும். சிலர் மாசி மாதத்தில் வழிபாடு செய்வார்கள். மேலும் அம்பிகையை வழிபாடு செய்வதற்கு ஒவ்வொரு மாதமும் உகந்த நாளாக ஞாயிற்றுக்கிழமைகளும் பௌர்ணமி தினங்களும் இருக்கிறது.
இந்த நாட்களில் அம்பிகைக்கு விளக்கேற்றி ஐஸ்வர்ய மகா கௌரி அம்பிகையின் படத்திற்கு சந்தன குங்குமம் திலகம் வைத்து மலர்கள் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது கட்டாயமாக அவர்களுடைய வீடுகளில் பொருளாதாரம் சிறந்து விளங்கும், கண் திருஷ்டி முற்றிலுமாக விலகிவிடும்
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |