சிம்ம ராசியில் கேது பயணம்- 18 மாதங்களுக்கு பின் வரும் பணயோகம்.. உங்க ராசியும் இருக்கிறதா?
நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னுடைய இடத்தை மாற்றும். அப்படி இடமாற்றம் நடக்கும் பொழுது அதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, நவகிரகங்களில் நிழல் கிரகமாக விளங்கும் கேது பகவான் 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுவார். சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இருப்பதால் இந்த பலன்கள் வித்தியாசமாக இருக்கும்.
கேது பகவானுக்கு என தனி ராசி இல்லை. இதனால் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவார்.
கேது பகவான் சிம்ம ராசியில் அடுத்த 18 மாதங்கள் பயணம் செய்வார் இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோக பலன்கள் கிடைக்கும்.
அந்த வகையில், கேது பகவான் சிம்ம ராசியில் பயணம் செய்தால் ஏற்படும் விளைவுகள் பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம் | கேது பகவான் சிம்ம ராசிக்கு பயணம் செய்வதால் ஜோதிடத்தின்படி, அதிர்ஷ்டம் கிடைக்கும். புதிய தொழில் செய்வதற்கான வாய்ப்பு வரும். நல்ல பலன்கள் உங்களை தேடி வருவதால் புதிய வாகனம் மற்றும் வீடு வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் உங்களுக்கு வெற்றிக் கிடைக்கும். உறவுகள் அனைத்தும் மேம்படும். இதனால் உங்கள் வீட்டில் உறவினர்கள் நிறைந்திருப்பார்கள். பயணங்கள் செல்வதற்கான வாய்ப்பு வரும். |
துலாம் | துலாம் ராசியில் பதினோராவது வீட்டிற்கு கேது பகவான் செல்கிறார். இதன் விளைவாக உங்கள் வருமானத்தில் முன்னேற்றம் இருக்கும். பணம் வரவு அதிகமாகி, உங்களுக்கு வாய்ப்புக்களை குவிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும் பெயர்ச்சியாக பார்க்கப்படுகிறது. பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் நல்ல உறவுகள் தேடிவரும். உங்களுக்கு இருக்கும் நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். |
கடகம் | கடக ராசியில் இரண்டாவது வீட்டில் கேது பகவான் பயணம் செய்வதால் திடீர் நிதி ஆதாயங்கள் பெற வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். வாழ்க்கையில் நல்ல மாற்றம் கிடைப்பதால் உங்களின் நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வணிகத்தில் சிக்கிக் கிடந்த பணம் கைக்கு வரும் சந்தர்ப்பங்கள் அமையும். புதிய திட்டங்கள் நல்ல லாபத்தைக் கொடுக்கும். நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். |
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |