கோயில்களில் கொடுக்கும் பிரசாதங்களை வீட்டிற்கு எடுத்து வரலாமா?

By Sakthi Raj Apr 12, 2024 06:04 AM GMT
Report

கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வதில் தொடங்கி தரிசனம் முடித்து வீடு திரும்பும் வரை நிறைய சந்தேகங்கள் இருக்கும்.

அப்படியாக பலருக்கும் சுவாமி தரிசனம் முடித்து கோயில்களில் கொடுக்கும் மாலை பிரசாதங்கள் விபூதி என்ன செய்ய வேண்டும்.வீட்டுக்கு எடுத்து வரலாமா?வீட்டுக்கு எடுத்து வந்த பிறகு அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற சந்தேகங்கள் இருக்கும்.

கோயில்களில் கொடுக்கும் பிரசாதங்களை வீட்டிற்கு எடுத்து வரலாமா? | Koyil Prasathangal Aanmegam Vazhipadu

அதை பற்றி பார்ப்போம். 

பொதுவாக கோயில்களில் கொடுக்கும் பிரசாதங்கள் அது உணவாக இருந்தால் நாம் கோயில்களிளே அமர்ந்து சாப்பிட்டு விடுவோம்.அப்படி இல்லை என்றால் வீட்டிற்கு எடுத்து வருவோம்,அப்படி வீட்டுக்கு எடுத்து வருகையில் அதில் கொஞ்சம் நம் வீட்டில் செடிகள் வளர்த்தால் அவைகளுக்கு போடுவது நல்லது.

மேலும் வீட்டில் செல்ல பிராணிகள் வளர்த்தாலும் அவர்களுக்கு கொஞ்சம் பிரசாதம் கொடுத்து உண்பது நன்மையை தரும்.

கோயில்களில் கொடுக்கும் பிரசாதங்களை வீட்டிற்கு எடுத்து வரலாமா? | Koyil Prasathangal Aanmegam Vazhipadu

எல்லோருக்கும் மிக முக்கியமான சந்தேகம் என்னவாக இருக்கும் என்றால் ?கோயிலில் கொடுக்கும் மாலையை வீட்டுக்கு எடுத்து வந்த பிறகு என்ன வேண்டும் என்ற சந்தேகம் இருக்கும்.

Madurai Chithirai Thiruvizha: கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது மதுரை சித்திரை திருவிழா

Madurai Chithirai Thiruvizha: கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது மதுரை சித்திரை திருவிழா


அதவாது சுவாமிக்கு அணிவித்து அது நமக்கு பிரசாதமாக கிடைத்த மாலையை நாம் வீட்டுக்கு எடுத்து வந்து வீட்டு நிலைகளில் போடலாம்.குறிப்பாக வீட்டு நிலையில் சுவாமி படங்கள் எதுவும் இல்லாமல் இருந்தல் வேண்டும்.ஆனால் கோயிலில் கொடுத்த மாலையை வீட்டில் உள்ள சுவாமி படங்களுக்கு போட கூடாது.

கோயில்களில் கொடுக்கும் பிரசாதங்களை வீட்டிற்கு எடுத்து வரலாமா? | Koyil Prasathangal Aanmegam Vazhipadu

சிறது காலம் கடந்த பிறகு அந்த மாலை காய்ந்து விடும்,அந்த வேளையில் மாலையை குப்பைகளில் போடுவதை தவிர்த்து விட வேண்டும். வீட்டு பக்கம் ஆறுகள் குளம் இருந்தால் அங்கு சென்று மாலை போடுவது நன்மையாகும்.

மேலும் கோயிலில் கொடுக்கும் விபூதி குங்குமங்களை நாம் வீட்டுக்கு எடுத்து  வந்து தினம் அதை இறைவனை பிராத்தனை செய்து வைத்து வர வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் அடையளாம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

 

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US