மறந்தும்கூட வலது பக்கம் தும்பிக்கை கொண்ட விநாயகரை வைக்கக்கூடாது ஏன்?
உங்கள் வீட்டில் விநாயக பெருமானின் சிலை வைப்பதற்கு முன்பாக வாஸ்து சாஸ்திரப்படி சில விதிமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
செல்வம் மற்றும் மகிழ்ச்சியை அள்ளி வழங்கக்கூடியவர் விநாயகர், தன்னுடைய பக்தர்களுக்கு தடைகளை நீக்கி வாழ்வில் சந்தோஷத்தை நிலைநாட்டச் செய்பவர்.
எனவே வீட்டில் விநாயகர் சிலை வைப்பதற்கு முன்பாக சில வாஸ்து சாஸ்திரங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
அதன்படி வீட்டின் பிரதான நுழைவாயிலில் விநாயகர் சிலையை வைக்க வேண்டும், தினமும் வழிபட வேண்டும்.
இந்த திருஷ்டி விநாயகர் உங்கள் வீட்டிற்குள் நுழையும் அனைத்து தீய சக்திகளையும் தடுத்துவிடுவார், வீட்டையும் பாதுகாப்பார் என நம்பப்படுகிறது.
முகப்பு வாயிலில் வைத்தால் ஜோடியாக வைக்க வேண்டும், ஒன்று நுழைவாயிலையும், மற்றொன்று அதற்கு எதிர்புறமாக பார்த்திருக்க வேண்டும்.
மறந்தும் கூட வலதுபக்கம் தும்பிக்கை கொண்ட விநாயகரை வைக்கக்கூடாது.
ஏனெனில் வலதுபக்கம் தும்பிக்கை கொண்ட விநாயகருக்கு பூஜை செய்யும் போது சிறப்பான கவனம் செலுத்த வேண்டும்.
இவைகளை வீட்டில் செய்வது கடினம் என்பதால் கோவில்களில் மட்டுமே வைத்திருப்பார்கள்.