சனி- செவ்வாய் சேர்க்கை: எந்தெந்த ராசிக்கு அதிர்ஷ்ட மழை?
நவகிரகங்களின் தளபதியான செவ்வாய் பகவான், 45 நாட்களுக்கு ஒருமுறை தன்னுடைய இடத்தை மாற்றக்கூடியவர்.
15ம் திகதி சனி பகவான் கும்ப ராசியில் இணைகிறார், இந்த ராசியில் செவ்வாய் பகவானும் இணைவதால் சனி- செவ்வாய் சேர்க்கை நடைபெறுகிறது.
இதனால் அனைத்து ராசிகளிலும் இதன் தாக்கம் இருக்கும், ஒரு சில ராசியினருக்கு ராஜயோகம் உண்டாகும்.
அவர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மேஷம்
கும்ப ராசியில் செவ்வாய் பகவான் இருப்பதால் மனதில் மகிழ்ச்சி குடிகொள்ளும், பொறுமையாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம் உண்டு, நன்மைகள் உண்டாகும், கல்வியில் கவனம் செலுத்துங்கள், ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
ரிஷபம்
திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகி குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும், பொறுமையை கடைப்பிடித்திடுங்கள், கல்வியில் முன்னேற்றம் உண்டு, புதிய முதலீடுகளின் மூலம் லாபம் அதிகரிக்கும், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மிதுனம்
பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு, செவ்வாய் பகவானால் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் பண வரவில் குறை இருக்காது, தேவையில்லாத செலவுகளை குறைத்துக்கொள்ளுங்கள், வீண்பேச்சு வேண்டாம். அரசு துறைகளில் ஆதரவு உண்டு.
சிம்மம்
செவ்வாய் பகவானால் இடப்பெயர்ச்சியால் எதிர்மறை எண்ணங்கள் தோன்றலாம், ஆனாலும் பண வரவில் குறை இருக்காது, நம்பிக்கை அதிகரித்துக்காணப்படும், கல்வியில் முன்னேற்றம் உண்டு. வியாபாரத்தில் லாபம் பெருகும், பணியிடத்தில் எதிர்பார்த்த நல்ல முடிவுகள் உண்டு, ஆரோக்கியத்தில் கவனம் தேவை.