அதிர்ஷ்டம் கிடைக்க புதன் கிழமை இந்த நிற ஆடையை அணியுங்கள்
நம்முடைய பேச்சு வழக்கில் ஒரு சில பல மொழிகள் இருக்கிறது.அதாவது பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று.இன்னும் சொல்ல போனால் நிறைய காரியங்கள் முதன் முதலில் செய்ய தொடங்கும் பொழுது அதை புதன் கிழமைகளில் தொடங்குவார்கள்.
அப்படியாக இவ்வளவு சிறப்பு மிகுந்த நாளில் புதன் பகவானை எவ்வாறு வழிபாடு செய்யவேண்டும்?அந்த நாளில் அதிர்ஷ்டம் கொடுக்கும் நிறங்களை பற்றி பார்ப்போம்.
புதன் எப்போதும் சொல் புத்திகாரகன். இவர் சந்திரனின் மைந்தன்.சந்திரன் நம் மனதின் எண்ண ஓட்டத்திற்கு சொந்தக்காரன். புத்தியை நிலைப்படுத்துபவன்.
புதன் பகவானை வழிபடுவதற்கு உகந்த கிழமை : புதன்கிழமை.
புதன் பகவானுக்கு உரிய ராசி : மிதுனம், கன்னி.
புதன் பகவானுக்கு உரிய திசை : வடகிழக்கு.
புதன் பகவானின் அதிதேவதை : மகாவிஷ்ணு.
புதன் பகவானுக்கு உரிய நிறம் : பச்சை.
புதன் தோஷம் இருப்பவர்கள் புதன்கிழமையில் பச்சை நிற ஆடை அணிவது புதன் தோஷத்தை போக்கும்.
ஒவ்வொரு நாளும் தானத்திற்கு சிறந்த நாளாக இருந்தாலும் புதன் அன்று பசுவுக்கு புல் கொடுப்பதால் மன சஞ்சலம் விலகி மன நிம்மதியும், உற்சாகமும் கிடைக்கும். பசுவுக்கு பச்சை பயிறு கொடுப்பதால் வருமான தடை நீங்கி வருமானம் பெருகி மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
திருநங்கைகளுக்கு பச்சை நிற ஆடை வாங்கி கொடுக்க நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.
இதோடு சேர்த்து வழிபாடு செய்யும் பொழுது அந்த பகவானுக்கு உரிய மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்ய எப்பொழுதும் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.அந்த வகையில் புதன் கிழமையில் புதன் பகவானை வழிபாடு செய்யும் பொழுது சொல்ல வேண்டிய புதன் பகவான் காயத்திரி மந்திரம்
ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுகஹஸ்தாய தீமஹி
தந்நோ புத ப்ரசோதயாத்
மேலும் புதன் கிழமையில், புதன் ஓரை மற்றும் புதன் பகவானுக்கான ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திர நாட்களில், புதன் பகவானை வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதால், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.
தொழிலில் வளர்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட மந்த நிலை மாறி லாபம் பெருகும். வீட்டில் சுபகாரியம் உண்டாகி அமைதி நிலவும்.அதை விட செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |