மாதந்தோறும் வழிபட வேண்டிய பைரவர்கள்
By Yashini
கால பைரவர், சிவ பெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவர்.
சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர்.
ஆடைகள் எதுவுமில்லாமல் பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், நிர்வாண ரூபமாய்க் காட்சி தருபவர்.
சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பைரவராகக் காட்சி தருகிறார்.
எந்தெந்த மாதத்தில் எந்த பைரவர் ஆட்சி புரிகிறாரோ அந்த பைரவரை வழிபட்டு நன்மை அடையலாம்.
- சித்திரை அம்சுமான் - சண்ட பைரவர்
- வைகாசி தாதா - ருரு பைரவர்
- ஆனி ஸவிதா - உன்மத்த பைரவர்
- ஆடி அரியமான் -கபால பைரவர்
- ஆவணி விஸ்வான் -ஸ்வர்ணாகர்ஷண பைரவர்
- புரட்டாசி பகன் - வடுக பைரவர்
- ஐப்பசி பர்ஜன்யன் - க்ஷத்ரபால பைரவர்
- கார்த்திகை துவஷ்டா - பீஷண பைரவர்
- மார்கழி மித்திரன் -அசிதாங்க பைரவர்
- தை விஷ்ணு - குரோதன பைரவர்
- மாசி வருணன் - ஸம்ஹார பைரவர்
- பங்குனி பூஷா -சட்டநாத பைரவர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |