சூனியம் விலக்கும் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில்

By பிரபா எஸ். ராஜேஷ் Dec 03, 2024 07:00 AM GMT
Report

மதுர காளியம்மன் கோவில் என்ற பெரம்பலூரில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிறுவாச்சூர் என்ற கிராமத்தில் உள்ளது. மதுர காளியம்மன் வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இதற்கு வடக்காக சோனை முத்தையா கோவில் உள்ளது.

சோனை முத்தையா மதுர காளியம்மனுக்கும் இங்கு ஏற்கனவே கோயில் கொண்டிருந்த செல்லியம்மனுக்கும் காவல் தெய்வமாக விளங்குகிறார். அகோர வீரபத்திரர் சிலையும் இங்கு காணப்படுகின்றது. அகோர வீரபத்திரரும் சிவனின் அம்சமாக காவல் தெய்வமாக இருக்கின்றார்.

சோனை முத்தையாவும் செல்லியம்மனும் நாட்டுப்புறத் தெய்வங்களாகும். மதுர காளி கண்ணகி என்று நம்பப்படுகின்றது. அகோர வீரபத்திரர் சேர்க்கை காலத்தால் பிந்தியது. மதுரையில் இருந்து புறப்பட்டு வந்த கண்ணகி சிறுவாச்சூரில் மதுர காளியாக அமர்ந்து விட்டாள் என்று கதைகள் சொல்கின்றன.

சூனியம் விலக்கும் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில் | Madurakaliamman Temple Thottiyam In Tamil

கண்ணகி செல்வி சேர்க்கை

சிறுவாச்சூரில் ஆதியில் இருந்த தனிப்பெண் தெய்வம் செல்லியம்மன். ஊர்களில் வடக்கு வாய் செல்வி என்ற பெயரில் வடக்கு நோக்கிய கன்னித் தெய்வ வழிபாடு ஆதியில் இருந்து வந்தது. கண்ணகி வந்த பின்பு செல்வியையும் கண்ணகியையும் பல ஊர்களில் இணைத்து ஒரே தெய்வமாக்கினர்.

இதை ஆங்கில சம்யவியல் அறிஞர்கள் synchronisation என்பர். ஐரோப்பிய நாடுகளில் ஆங்காங்கே மலை குகைகளில் வைத்து வணங்கிய ஆக்னேஸ், மடோனா, பியாட்ரிஸ் போன்ற தெய்வங்களை ஒரே கன்னி மேரி என்று ஒரே தெய்வமாகினர்.

பிரம்மனுக்கு தனி சந்நிதி உள்ள திருப்பட்டூர் கோயில்

பிரம்மனுக்கு தனி சந்நிதி உள்ள திருப்பட்டூர் கோயில்

மதுரையில் இருக்கும் கண்ணகியின் கோவிலுக்கு தற்போதைய பெயர் செல்லத்தம்மன் கோயில். வடக்கு வாய்ச் செல்வி என்று வணங்கப்பட்டு வந்த பெண் தெய்வத்தோடு கண்ணகி வழிபாடும் இங்கு இணைந்துள்ளது.

செல்வி அம்மன், செல்லியம்மன், செல்லாயி அம்மன்,, செல்லத்தம்மன் என்று பல பெயர்களில் தமிழகமெங்கும் கன்னித்த தெய்வ வழிபாடு இருந்துள்ளது. அவற்றில் சில கண்ணகி வழிபாட்டுடன் இணைந்தன.

கண்ணகி வழிபாடு

மதுரையில் மேற்கு நோக்கி கோபமாக புறப்பட்ட கண்ணகி இங்கு வந்ததும் தெய்வம் ஆனாள். இக்கதையைப் போலவே கேரளாவில் கொடுங்கலூர் பகவதி அம்மன் கோவிலைக் கண்ணகி வந்து தங்கிய கோவில் என்பர்.

ஏற்கனவே இருந்த பெண் தெய்வ வழிபாட்டு கோவில்களில் காலத்திற்கு ஏற்ப கதைகளை மாற்றி பழைய பெயரில் புதிய தெய்வங்களை இணைத்து நவீனப்படுத்தும் முறைகளைக் காணலாம்.  

சூனியம் விலக்கும் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில் | Madurakaliamman Temple Thottiyam In Tamil

மதுர காளி தெய்வமான கதை

சிறுவச்சூர் கோவிலில் இன்னொரு கதையும் உலவுகின்றது. இங்கு செல்லியம்மன் என்ற தெய்வம் இருந்து வந்தாள் அவளை ஒரு மந்திரவாதி தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். மதுரையில் இருந்து வந்த காளியம்மன் செல்லியம்மனிடம் இன்று ஒரு நாள் இங்கு தங்கிப் போகிறேன் என்று இடம் கேட்டாள்.

ஆனால் செல்லியம்மன் மந்திரவாதிக்குப் பயந்து கொண்டு தன்னை மந்திரவாதியிடமிருந்து காப்பாற்றினால் மதுர காளிக்குத் தங்க இடம் தருவதாகக் கூறினாள். மதுர காளி மந்திரவாதியை அழித்து விட்டாள். செல்லியம்மன் காளியை பார்த்து 'இனி நீயே இங்கு கோயில் கொண்டிரு.

இங்கு வரும் பக்தர்களுக்கு அருள் வழங்கு' என்று சொல்லிவிட்டு அருகில் இருக்கும் பெரியசாமி மலைக்குச் சென்று விட்டாள். ஒக்கும் முன்பு ' எப்பொழுதும் இந்த கோவில் வழிபாட்டில் எனக்கு தான் முதல் மரியாதை தரவேண்டும்' என்றாள்.

திருவல்லா மகாவிஷ்ணு சுதர்சன மூர்த்தி திருக்கோவில்

திருவல்லா மகாவிஷ்ணு சுதர்சன மூர்த்தி திருக்கோவில்

இவ்வாறு செல்லியம்மன் கூறியதால் சூட தீபாராதனைகள் காட்டும் போது பெரியசாமி மலையை நோக்கி முதலில் அங்கு இருக்கும் செல்லியம்மனுக்கு காட்டிய பிறகுதான் சன்னதிக் கு உள்ளே இருக்கும் மதுர காளிக்கு சூட தீபாராதனை காட்டுகின்றார்கள்.

இக்கதைகள் ஏற்கனவே இருந்தவள் செல்லியம்மன் அங்குப் புதிதாய் வந்து சேர்ந்தவள் மதுர காளி என்னும் கண்ணகி என்ற தகவலை உறுதி செய்கின்ற்ன. தெய்வம் மாற்றத்தை உணர்த்துகின்றன. இதைத்தான் ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதை என்போம்.

வெளியில் இருந்து வரும் தெய்வங்கள் ஊருக்குள்ளேயே இருக்கும் தெய்வங்களின் சக்தியை குறைத்துவிட்டு தானே சர்வ சக்தி படைத்த தெய்வமாகத் தங்கி விடுகின்றன.  

சூனியம் விலக்கும் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில் | Madurakaliamman Temple Thottiyam In Tamil 

மங்கலதேவிக் கோயில்

கண்ணகிக்கு இலங்கை, தமிழ்நாடு, கேரளா என பல இடங்களிலும் கோவில்கள் உண்டு. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமுளியில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் மங்கல தேவிக் கோவில் என்ற பெயரில் தனி கோயில் உள்ளது.

இது தமிழ்நாட்டுக்குள் கேரளாவுக்கும் இடையே எல்லை பகுதியில் உள்ளது. தேனி மாவட்டத்தில் கூடலூர் வனப்பகுதியில் பளியர்கள் அதிகம் வாழும் பளியங்குடி என்னும் இடத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் சித்ரா பௌர்ணமி தினத்தன்று மட்டும் திறக்கப்படும். அன்று மட்டும் இக்கோவிலுக்கு வர பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இக்கோவிலைச் சேரன் செங்குட்டுவன் கட்டியதாக சொல்வர். மதுரையை எரித்தபின் மேற்கே புறப்பட்டுச் சேர நாட்டுக்கு வந்த கண்ணகி இங்கிருந்த வேங்கை மரத்தடியில் நின்றாள். கோவலன் புஷ்ப விமானத்தில் வந்து அழைத்து சென்றான்

திரிசதம் சொல்லும் பவளமலை முருகன் கோவில்

திரிசதம் சொல்லும் பவளமலை முருகன் கோவில்

கொடுங்களூர் பகவதி கோயில்

கேரளாவில் கொடுங்கலூர் மாவட்டத்தில் உள்ள பிரபலமான கொடுங்களூர் பகவதி கோயிலில் வணங்கப்படும் பகவதியம்மை கண்ணகியே என்றும் அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். கொடுங்கலூர் அரச குடும்பத்தார் கொடுங்கல்லூர் பகவதியை தமது குலதெய்வமாகக் கருதுகின்றனர்.

ஆதிசங்கரர் இங்கு 6 ஸ்ரீ சக்கரங்களை நிறுவினார் என்றும் கூறுகின்றனர். இங்கு காளி ரூபத்தில் எட்டுத் கைகளுடன் மஅம்மை கோயில் கொண்டுள்ளாள். இங்குத் தொடக்கத்தில் உயிர்ப் பலி தரப்பட்டது. பின்பு அரசு உத்தரவால் நிறுத்தப்பட்டது.

இத் தெய்வத்திற்கு சிவப்பு சாயம் நனைத்த சிவப்பு துணிகளை மட்டும் உடுத்துகின்றனர். சிறுவாச்சூர் மதுர காளிக்கு தலை முதல் பாதம் வரை குங்குமம் சாத்தப்படுகிறது. ஆக இவ்விரு தெய்வங்களும் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றன.

சூனியம் விலக்கும் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில் | Madurakaliamman Temple Thottiyam In Tamil

திங்கள், வெள்ளி மட்டும் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில் வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே திறந்து வைக்கப்படும். மதுர காளி சிறுவாச்சூர் வந்து சேர்ந்த வெள்ளிக்கிழமையும் அவள் அங்கே தங்குவதற்குக் கோவில் கிடைத்த திங்கட்கிழையும் மட்டுமே இவ் ஆலயம் திறந்திருக்கும்.

இவ்விரு நாட்களும் தேவிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். மற்ற நாட்களில் மதுர காளியம்மன் செல்லியம்மனுடன் போய் பெரியசாமி மலையில் தங்கி விடுவாள். மதுரை காளி என்ற பெயரே மதுர காளி என்று இனிமையான ஒரு பெயரராக மாற்றம் பெற்றது என்று இப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். 

பூச்சொரிதல் விழா

மதுர காளியம்மன் கோவிலில் சித்திரை மாத வளர்பிறை முதல் செவ்வாய் அன்று பூச்சொரிதல் விழா தொடங்கும். அடுத்த செவ்வாய் அன்று காப்பு கட்டு நடைபெறும்.மொத்தம் 13 நாட்கள் திருவிழா நடத்துவார்கள். எட்டாம் நாள் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டியதும் சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து மக்கள் பெரியசாமி கோவில் மலை அடிவாரத்தில் கூடுவார்கள்.

அங்கு இரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்று உயிர் பலிகள் கொடுக்கப்படும். அது தான் ஆதி கோயில் என்பதால் அங்கேயே மக்கள் செல்கின்றனர். மலைக்கோயில் பூஜை முடிந்த மறு நாள் புதன்கிழமை அன்று மதுர காளியம்மன் கோவில் முன் பொங்கல் வைத்து கொண்டாடுவர்.

வியாழக்கிழமை அன்று மழை பெரியசாமிக்கும் செல்லியம்மனுக்கும் மதுர காளிக்கும் தேர்ப்பவனி நடைபெறும். வெள்ளிக்கிழமை அன்று மதுர காளியம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கும். சனிக்கிழமை மஞ்சள் நீராட்டுடன் பூச்சொரிதல் விழா நிறைவு பெறும்.

இது தவிர ஆடி பதினெட்டாம் பெருக்கு புரட்டாசியில் வரும் நவராத்திரி போன்ற மற்ற விழாக்களும் மற்ற சிவன் கோவிலில் நடைபெறுவது போல இங்கும் நடைபெறுகின்றன.

சூனியம் விலக்கும் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில் | Madurakaliamman Temple Thottiyam In Tamil

அமாவாசை &பௌர்ணமி

மதுர காளியம்மன் திருக்கோயில் வாரத்தில் இரண்டு நாட்கள் திறந்து வைத்திருப்பதை போலவே மாதத்தில் இன்னும் இரண்டு நாட்கள் திறந்து வைக்கப்படுகின்றன. அவை அமாவாசையும் பௌர்ணமியும் ஆகும் இவ்விரு நாட்களிலும் பக்தர்கள் மதுரகாளியைத் தரிசனம் செய்யலாம். 

நேர்த்திக் கடன்கள்

மதுர காளியம்மன் கோவிலில் பெருமளவில் பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி அம்மனை வேண்டிக் கொள்கின்றனர். மாவிளக்குக்குப் பொதுவாக வீட்டில் இருந்தே மா இடித்துக் கொண்டு வருவர். சிலர் இங்கு வந்து அரிசியை ஊறப் போட்டு மாவை இடித்து விளக்கு ஏற்றுகின்றனர். இவர்களுக்காக இங்கு கல் உரல்கள் வைக்கப்பட்டுள்ளன.

திருமணத் தடை நீக்கும் மாதேஸ்வரன் மலைக் கோவில்

திருமணத் தடை நீக்கும் மாதேஸ்வரன் மலைக் கோவில்

திருமணம் நடக்க, பிள்ளை பிறக்க

மதுர காளியம்மன் கோவிலில் திருமணத்தடை குழந்தை பேறின்மை ஆகியவற்றுக்காக காளியை வணங்கினால் புத்திர தோஷம் களத்திர தோஷம் தீரும்.

பொருள் காணாமல் போய்விட்டால் மதுர காளியிடம் வந்து வேண்டிக் கொள்கின்றனர். திடீர் நஷ்டம் ஏற்படும் போது எதிர்பாராத இன்னல்கள் ஏற்படும் போது பலரும் மதுர காளியம்மன் நேரில் தரிசித்து தங்கள் துன்பம் தீர முறையிடுகின்றனர்.

பில்லி சூனியம் விலக

மதுர காளியம்மன் கோவிலில் பில்லி சூனியம் ஏவல் போன்ற தீய சக்திகளில் தங்களை காத்துக் கொள்ளவும் பக்தர்கள் ஏராளமாக வந்து வேண்டிக் கொள்கின்றனர். மதுர காளி மந்திரவாதியை தோற்கடித்தவள் என்பதால் மந்திர தந்திரங்களை அவள் அழித்து ஒழிப்பாள் என்ற நம்பிக்கை நிலவுகிறது. காத்து, கருப்பு, கண் திருஷ்டி போன்றவற்றால் துன்புறுவோரும் இங்கு வந்து காளியை வணங்கி தீர்வு காணகின்றனர்

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.




+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US