மகாசிவராத்திரி 2025: சிவன் அருளை பெற நாம் வீட்டில் விரதம் இருக்கும் முறை
இன்றைய தினம் சிவபெருமானை முழுமனத்தார வழிபாடு செய்வதால் நம் வாழ்க்கையில் சிறந்த பலன்களை பெறலாம்.அப்படியாக பலரும் இந்த சிவராத்திரி அன்று அவர்கள் வேண்டுதல் நிறைவேற விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள்.
அந்த வகையில் மஹாசிவராத்திரி அன்று விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்யும் முறையை பற்றி பார்ப்போம். எவர் ஒருவர் கண்களில் நீர் வழிந்து உண்மையான பக்தியோடு சிவபெருமானை வழிபாடு செய்கிறார்களோ அவர்ளுக்கு சிவபெருமான் அருளால் அவர்கள் வாழ்க்கையில் உள்ள இன்னல்கள் விலகும்.
அப்படியாக மஹாசிவராத்திரியில் ஒருவர் விரதம் இருந்து சிவபெருமானுக்கு வில்வ இலைகள் கொண்டு அர்ச்சனை செய்து வழிபாடு செய்பவர்களுக்கு அற்புதமான பல வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். புதன்கிழமையில் மகா சிவராத்திரி அன்று காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் விளக்கேற்றி சிவ மந்திரங்களை உச்சரித்து தொடர்ந்து ஒரு மணி நேரம் ஆவது அமர்ந்து தியானம் மேற்கொள்ள வேண்டும்.
பிறகு மாலை 6:00 மணிக்கு முதல் கால பூஜையை துவங்க வேண்டும்.முதல் கால பூஜை பிரம்ம தேவர் சிவபெருமானுக்கு செய்வது ஆகும்.இந்த நேரத்தில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது மிக சிறந்த பலன் கொடுக்கும்.இந்த முதல் கால பூஜைக்கு பாசிப்பருப்பு கலந்த பொங்கலை நைவேத்தியம் படைத்து, ஏழரை மணிக்கு பாலபிஷேகம் செய்து சிவபெருமானை வழிபட வேண்டும்.
அதனை தொடர்ந்து இரண்டாம் கால பூஜை மகாவிஷ்ணு சிவபெருமானை வழிபடுவது ஆகும்.இந்த நேரத்தில் பஞ்சாமிர்தத்தால் பத்தரை மணி அளவில் அபிஷேகம் செய்து, சிவனுக்கு பொங்கல், பாயாசம், கற்கண்டு ஆகியவற்றை நைவேத்தியம் படைத்து மனதார வழிபட வேண்டும்.
அதனை தொடர்ந்து முன்றாம் கால பூஜை தாய் பார்வதி தேவி வழிபடக்கூடிய நேரம் ஆகும். நள்ளிரவு 12:00 மணி அளவில் இந்த பூஜையை மிக முக்கியமாக செய்ய வேண்டும்.அந்த நேரத்தில் “ஓம் நமச்சிவாய” என்னும் இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை தொடர்ந்து 108 முறை உச்சரித்து வழிபாடு செய்யவேண்டும்.
கடைசியாக நான்காம் கால பூஜை அதிகாலை நாலரை மணிக்கு தேவர்கள், மனிதர்கள், ரிஷிகள், முனிவர்கள் என்று அனைத்து சிவ பக்தர்களும் வழிபடக்கூடிய காலம் ஆகும்.இந்த நேரத்தில் விழித்திருந்து சிவபெருமானை வழிபாடு மிக முக்கியமான ஒன்றாகும்.இந்த நேரத்தில் மனதார சிவபெருமானை நினைத்து வேண்டுதல் வைக்க அவை நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |