மகாபாரதம்: பொறுமையின் அவசியத்தை உணர்த்தும் காந்தாரி
மனிதன் வாழ்விற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளும் ஒரு காவியம் என்றால் அது மகாபாரதம் தான். அப்படியாக, மனிதனுக்கு பொறுமை ஏன் மிகவும் அவசியம் என்பதை மகாபாரதத்தில் ஓரு நிகழ்வு உணர்த்துகிறது. அதை பற்றி பார்ப்போம்.
மகாபாரதத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் பஞ்சபாண்டவர்கள். இவர்கள், மந்திர வலிமையால் பிறந்தவர்கள். இவர்களில் மூத்தவரான தர்மபுத்திரர் பிறந்த பொழுது, திருதராஷ்டிரர் மனைவி காந்தாரியும் கருவுற்று இருந்தாள்.
அப்படியாக, குந்திக்கு தர்மபுத்திரன் பிறந்த செய்தி கேட்டு காந்தாரிக்கு மனம் சற்றும் பொறுக்கவில்லை. நமக்கு முன்னால் இவள் பிள்ளை பெற்றுவிட்டால் என்ற ஆத்திரத்தில், காந்தாரியின் மனம் கொதித்தது.
அந்த கொதிப்பு அடங்காமல் அவள் புத்தி தடுமாற்றத்தால், அவளுடைய வயிற்றில் தனக்கு தானே குத்தி கொண்டாள். அதன் விளைவாக கரு கலைந்து குழந்தை பிறப்பதற்கு பதிலாக, மாமிச பிண்டம் வந்து விழுந்தது.
அந்த சமயம், அங்கு வந்த வியாச மகரிஷி காந்தாரியின் நிலைமையை பார்த்து, இரக்கம் கொண்டு, காந்தாரிக்கு பிறந்த மாமிச பிண்டத்தை நூறு பகுதிகளாக்கி, அந்த நூறையும் தனித்தனி எண்ணெய் கூடங்களில் போட்டு வைக்கும் படி கூறினார்.
அதோடு, அதை மாமிசத்திற்கு தனது பிராண சக்தியை செலுத்தி உயிர் கொடுத்தார். பிறகு, காந்தாரியிடம் குறிப்பிட்ட காலம் வரை, அந்த பாத்திரத்தை திறந்து பார்க்க கூடாது என்று வியாச மகரிஷி கூறினார்.
ஆனால், காந்தாரிக்கும் பொறுமைக்கும் தான் வெகு தூரம் ஆயிற்றே. அவசரம் பொறுக்காமல் பாத்திரத்தை திறந்து பார்த்தாள். அந்த பாத்திரத்தில் குழந்தைங்கள் இருந்தன. ஆனால் அவள் அவசரம் பொறுக்காமல் திறந்து பார்த்ததால் நூறு குழந்தைகளும் முழுநிலை அடையாத, குறை மனதோடு பிறந்தது.
அவள்,வியாச மகரிஷி சொன்னது போல், பொறுமையுடன் காத்திருந்தாள், பஞ்ச பாண்டவர்களை போல் அவளுக்கும் ஊர் போற்றும் பிள்ளைகள் பிறந்து இருப்பார்கள். அவளின்,அவசர புத்தியால் எல்லாம் நிலை மாறியது.
ஆக, இறைவன் நமக்கு எப்பொழுதும், ஒரு வாய்ப்பு கொடுக்கிறார். அதை சரியாக அனுபவிக்க நாம் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். அவரச புத்தியால் செயல் பட எல்லாம் நிலை தடுமாறி, கைமீறி போயிவிடும்.
அடுத்த நொடி கூட நமக்கானதாக இருக்கலாம். அதை அனுபவிக்க பொறுமை அவசியம் என்பதை நாம் காந்தாரி வழியாக புரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |