எத்தனை முக விளக்கு என்ன பலன்?
By Sakthi Raj
ஒரு முகம் ஏற்றினால் நினைத்த செயல்கள் நடக்கும்.
இரண்டு முகங்கள் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை கிட்டும்.
மூன்று முகங்கள் ஏற்றினால் புத்திர தோசம் நீங்கும்.
நான்கு முகங்கள் ஏற்றினால் பசு, பூமி, செல்வம் ஆகியவை கிடைக்கும். சர்வ பீடை நிவர்த்தியாகும்.
ஐந்து முகங்கள் ஏற்றினால் சகல நன்மையும் ஐஸ்வரியமும் கிடைக்கும்.
நெய்யினால் தீபம் ஏற்றினால் சகல வித சம்பத்துக்களும் கை கூடும். செல்வம் பெருகும்.
நல்லெண்ணை தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் கிடைக்கும்.
நம்மை விட்டு எல்லா பீடைகளும் அகலும், நவகிரக தோசம் நிவர்த்தி தரும். எல்லா தெய்வ வழிபாடுகளுக்கும் நல்லெண்ணை ஏற்றது. விளக்கு எண்ணை தீபம் ஏற்றினால் புகழ் கிடைக்கும்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |