மந்திரங்களை தவறியும் இந்த திசையில் இருந்து பாராயாணம் செய்து விடாதீர்கள்
இறைவழிபாட்டில் மந்திரங்களை பாராயணம் செய்து வழிபாடு செய்வது என்பது மிகவும் முக்கியமான மற்றும் சக்தி வாய்ந்த ஒன்றாக உள்ளது. அப்படியாக, நாம் மந்திரங்களை எந்த திசையில் நின்று பாராயணம் செய்கின்றமோ அதற்குரிய பலன்கள் நமக்கு கிடைக்கும். அந்த வகையில் மந்திரங்களை எந்த திசையில் இருந்து பாராயணம் செய்தால் நன்மை உண்டாகும் என்று பார்ப்போம்.
1. ஒருவர் கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் வசியம் உண்டாகும். நினைத்ததை அடையலாம்.
2. தென்கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் ஆரோக்கிய குறைபாடுகள் விலகும்.
3. தெற்கு நோக்கி ஜபம் செய்வதை தவிர்க்க வேண்டும். அவை சில தீமைகளை உண்டு செய்யும்.
4. தென்மேற்கு நோக்கு ஜபம் செய்தால் திடீர் வறுமை பொருள் இழப்புகள் வரலாம்.
5. மேற்கு நோக்கு ஜபம் செய்தால் திடீர் செலவு வரும். பணத்தின் அருமை புரியும். கவனம் வேண்டும்.

6. வடமேற்கு நோக்கி ஜபம் செய்தால் தீயசக்திகள், கண் திருஷ்டி விலகும்.
7. வடக்கு நோக்கி ஜபம் செய்தால் பொன் பொருள் சேர்வதோடு, படிப்பில் சிறந்து விளங்கலாம்.
8. வடகிழ்க்கு நோக்கி ஜபம் செய்தால் ஆன்மீகத்தில் நாட்டமும் முக்தியும் கிடைக்கும்.
ஜபம் செய்யும் இடமும் பலனும்:
வீடு - வீடுகளில் இருந்து ஜபம் செய்தால் பத்து மடங்கு பலன் கிடைக்கும்.
கோவில் - கோயிலுக்கு சென்று ஜபம் செய்தால் 100 மடங்கு பலன் கிடைக்கும்.
குளம் - இங்கு சென்று ஜபம் செய்தால் கட்டாயம் ஆயிரம் மடங்கு பலன்.
ஆற்றங்கரை - லட்சம் மடங்கு பலன் தரும்.
மலை உட்சி - இறைவனோடு இணைய மலை உச்சி சென்று ஜபம் செய்தால் கோடி மடங்கு பலன் கிடைக்கும்.
சிவன் சன்னிதி - சிவன் சன்னதி சென்று வழிபாடு செய்தால் பல கோடி மடங்கு பலன் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |