மகாசிவராத்திரி அன்று சொல்லவேண்டிய சக்தி வாய்ந்த சிவ மந்திரம்
சிவபெருமானின் முக்கிய நிகழ்வாக சிவராத்திரி திகழ்கிறது.இந்த சிவராத்திரியில் பலரும் சிவபெருமானின் ஆலயம் சென்றும் அவர் அவர் குலதெய்வம் ஆலயம் சென்றும் கண்விழித்து வழிபாடு செய்வார்கள்.இவ்வாறு வழிபாடு செய்வதால் அவர்கள் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நடைபெறும்.
பொதுவாகவே மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரியை மகா சிவராத்திரி என்று சொல்லுவோம்.பெரும்பாலான பக்தர்கள் சிவராத்திரி அன்று உணவு எடுக்காமல் விரதம் இருந்து அருகில் இருக்கு சிவன் கோயிலுக்கு சென்று அங்கு நடக்கக்கூடிய நான்கு கால பூஜைகளில் கலந்துகொண்டு கண்விழித்து சிவபெருமானை வழிபாடு செய்வார்கள்.
அவ்வாறு செய்வதால் அவர்கள் வாழ்க்கையில் பாவங்கள் விலகி மோட்சம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.மேலும்,அன்றைய தினம் முழுவதும் சிவபெருமானை மனதில் வைத்து வழிபாடு செய்து அவருக்குரிய மந்திரம் சொல்லி வழிபாடு செய்தால் சிவன் அருளால் நம்முடைய கவலைகள் தடைகள் விலகி வாழ்க்கை மேம்படும்.அப்படியாக,சிவராத்திரி அன்று நாம் சொல்ல வேண்டிய முக்கியமான சிவன் மந்திரம் பற்றி பார்ப்போம்.
மந்திரம்:
“மவ சிவ”
அனைவராலும் நியாபகம் வைத்து சொல்லக்கூடிய எளிய மந்திரம் தான்.இதை நாம் வீட்டில் சிவராத்திரி அன்று மனதில் சொல்லி வழிபாடு செய்ய நாம் நினைத்த காரியங்கள் எல்லாம் நடக்கும்.அதோடு உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட தோஷங்களுடைய தாக்கம் முற்றிலுமாக குறையும்.
சிவன் என்று சொன்னாலே நாம் பிறவி பலனை அடைந்து விடலாம்.அப்படியாக உங்கள் வாழ்க்கையில் எண்ணற்ற மாற்றம் பெற சிவராத்திரி அன்று வழிபாடு செய்யுங்கள்.உங்கள் வாழ்க்கையில் மன அமைதியும் நிம்மதியும் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |